எங்களை அவமானபடுத்திவிட்டனர்; தரக்குறைவாக நடத்திவிட்டனர்; திரைப்படத்தில் கீழ்த்தரமாக சித்தரித்துவிட்டனர் என்று ஒருபுறம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்..
மற்றொருபுறம், பயணம் செய்கையிலும் பொது இடங்களிடம் ஆண்களைக் கண்டால் "காசு கொடு" என்று கேட்பதும், கொடுக்கவில்லையென்றால் நச்சரிப்பதும் அவர்களின் மீதான மரியாதையை இழக்கச் செய்கிறது..
இன்று கண் முன்னே நடந்த ஒரு நிகழ்வு....
மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து சேத்துப்பட்டு சென்று கொண்டிருந்த போது இரண்டு திருநங்கைகள் நான் இருந்த பெட்டியில் ஏறினர். இடம் காலியாக இருந்ததால் ரயிலில் ஏறியவுடனே நான் அமர்ந்துவிட்டேன். அந்த இரண்டு திருநங்கைகளும் என்னருகில் வந்தனர். அதை தெரிந்து கொண்ட நான் முன்கூட்டியே தூங்குவதை போல் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஏனென்றால் இது போன்ற அனுபவம் எனக்கு ஏற்கனவே ஏற்பட்டிருந்தது. என்னருகில் ஒரு இளைஞர் இருந்தார். அவர் அருகே அந்த இருவரும் சென்றனர். "மாமா காசு கொடு" என்றனர் அவர்கள் கேட்டு முடிக்கும் முன்பே அந்த இளைஞர் "என்ட்ட இல்ல" என்றார். ஆனால் அவர்கள் செல்லவில்லை. இந்த முறை அவர்கள் "காசு கொடுக்கலைனா உனுக்கு கலியாணம் ஆகாது" என்றனர். அவர் இன்னும் திருமணம் ஆகாதவர் போல, உடனே பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாயை எடுத்து கொடுத்துவிட்டார். அத்துடன் அவர்கள் முடித்து கொள்ளவில்லை. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி பக்கத்துக்குப் பெட்டிக்கு சென்று விட்டனர்.
சென்னையில் மின் தொடர்வண்டியில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது புதிதல்ல. தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு தான். ஆனால் இது போன்ற அவர்களுடைய செய்கைகள் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கும், அவர்களின் உரிமைக்காக போராடுபவர்களுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
திருநங்கைகளை "மூன்றாவது பாலினமாக்குவது", அவர்களுக்கென்று "தனி இடஒதுக்கீடு"என்று காலமும், அவர்களின் மீதான பார்வையும் மாறி கொண்டு இருக்கிறது. இதை அவர்களும் புரிந்து கொண்டால் மற்றவர்கள் அவர்களை தரக்குறைவாக சித்தரிப்பதும், அவர்களே அவர்களை தாழ்த்திக் கொள்ளும் நிலையும், இனி இந்த சமூகத்தில் ஏற்படாது...
கார்த்திக் பிரகாசம்..

Comments
Post a Comment