Skip to main content

Posts

Showing posts from August, 2015
தாடியை சோகத்தின் அடையாளமாக அறிவித்தவன் யார்..? ஒருவன் தாடி வைத்தால் எத்தனை கேள்விகள்...! காதல் தோல்வியா..? வீட்டில் விரோதமா..? பணப் பிரச்சினையா..? மனதில் பாரமா..? ஒரு வேளை தா...

ஆறிலிருந்து அறுபது வரை...

பத்தாம் வகுப்பு...         அவன் பெயர் மணி.. நன்றாக படிக்கக் கூடிய மாணவன்.. இருந்தாலும் கடைசிப் பெஞ்சில் அமர்ந்திருந்தான். அதற்கு அழகான ஒரு காரணமும் இருந்தது.. அவனுடைய அன்புத் தோழி அந்த வரிசையில் தான் அமர்ந்திருந்தாள். இருவரும் உண்மையான நட்பை ஒருவர் ஒருவர் மீது வைத்திருந்தனர். மணியின் மனதிலோ அவளைப் பற்றிய நினைவுகளே எப்பொழுதும் ஓடிக் கொண்டிருந்தன. இது "காதல்" தான் என்று மணி நம்பினான். அதை அவளிடம் எப்படியாவுது சொல்லி விட முயற்சித்தான். ஆனால் ஒருவித தயக்கம் அவன் மனதில் தடையாக தடுத்துக் கொண்டிருந்தது.. இதில் இறுதித் தேர்வுகள் முடிந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது.. பன்னிரெண்டாம் வகுப்பு...         இரண்டு வருடங்கள் உருண்டோடி இருந்தன. அன்று பதினோராம் வகுப்பு மாணவர்கள் தங்களின் முன்னவர்களுக்கு பிரியா விடை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.  இன்று எப்படியாவது தன் காதலை சொல்லி விட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டான். அவளே அவனைத் தேடி வந்தாள். அருகில் வந்து,  "நீ தான் என்னுடைய மிகச் சிறந்த நண்பன்" என்று சொல்லி அவன் கன்னத்தில் ம...
ஒருவன் மானத்தை உடலாக நினைத்தால் மனிதாபிமானத்தை உயிராக உணர  வேண்டும்...!!! கார்த்திக் பிரகாசம்...
இரவில் தூக்கத்திற்கு தோள் கொடுக்கத் தான் பாடல்களைத் துணைக்கு அழைத்தேன்...!!! ஆனால் அது என் துயரங்களை நெஞ்சுக்குள் நிழற் படமாக்கி கண்களை ஈரமாக்கி இரவை நீளமாக்குகிறது...!!! கார்த்திக் பிரகாசம்...

0 1 2 3 4 5 6 7 8 9

    ஒரு மாலை நேர சந்திப்பில், 0123456789 ஆகிய "எண்கள்"  மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து கொண்டிருந்தன..      ஏதேதோ பேசிக் கொண்டிருந்த எண்களுக்குள் திடிரென்று தங்களில் யார் பெரியவன்..? என்ற வினா எழுந்தது..       விவாதித்துக் கொண்டிருக்கும் போதே எண் 9 எண் 8யை கன்னத்தில் அடித்தது.. 8 அழுதுக் கொண்டே ஏன் என்னை அடித்தாய் என்று 9 விடம் கேட்டது..       அதற்கு 9, உன்னை விட நான் தான் பெரியவன் அதனால் தான் அடித்தேன் என்றது.. 9 இந்த பதிலைச் சொல்லி முடிக்கும் முன்பே  8, எண் 7யை அடித்தது..       உடனே 7, 6யை அடித்தது... 6, 5யை அடித்தது... 5, 4யை... 4, 3யை... 3, 2யை.. 2, 1யை அடித்தது..       அடுத்து 1ன் தருணம்... எண் 1, தன்னை சுற்றி பார்த்தது.. 0 அடுத்த அடி தனக்குத் தான் என்று பயந்து கொண்டு கன்னத்தில் கை வைத்து பாவமாக நின்று கொண்டிருந்தது..        1, 0வின் அருகில் சென்றது.. அடிக்கப் போகிறது என்று 0, 1 அடிக்கும் முன்னே அழத் தொடங்கியது.. 1 அருகில் சென்று 0 யை அடிக்காமல் அதை தூக்கி...

சுதந்திரம்...

நம் முன்னோர்கள் வாளுக்குத் தலை வணங்காமல் துப்பாக்கியைக் கண்டு தூர ஓடாமல் அதிகாரத்தைக் கண்டு அதிராமல் அந்நியர்களைக் கண்டு அஞ்சாமல் நெஞ்சை நிமிர்த்தி செந்நீரை ...

நிலாச் சோறு...

      "அம்மா.. ரொம்ப பசிக்குது.. குடிக்க கஞ்சி எடுத்து குடு மா.."" என்று அவசர அவசரமாகக் கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் மணி..      சரஸ்வதி வாயைத் திறந்து எதுவும் சொல்லாமல் அமைதியாக முதுகை முன் வாசலுக்குக் காட்டி அமர்ந்திருந்தாள்..       மணி சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு, அம்மா நீ சீக்கிரம் கஞ்சி எடுத்து வை. நான் வாசல்ல போய் வானத்துல நிலா வந்திருச்சான்னு பாக்குறேன் என்று சொல்லிவிட்டு வாசலில் வந்து நின்று, நிலா வராததைக் கண்டு "..ரொம்ப பசிக்குது நிலா.. நீ சீக்கிரம் வா.. நீ வந்த தான் சாப்பிட முடியும் என்று.." வானத்தையே பார்த்து பேசிக் கொண்டிருந்தான் மணி..      பாவம் சரஸ்வதி மட்டும் என்ன செய்வாள். அவளும் முழுதாய் மூணு வேளை சாப்பிட்டது அவள் கணவன் உயிரோடு இருக்கும் வரை தான்.. அவன் ஒரு நாள் அதிகமாக குடித்து விட்டு போதையில் லாரியில் மோதி அடிபட்ட இடத்திலேயே இறந்து விட்டான்.. அந்த நாள் முதலே அடுத்த வேளை கஞ்சிக்கே அவதிப்படும் நிலை தான் அவளுக்கு.. மணி வேற சின்னப் பையன். அப்பா இறக்கும் போது அவனுக...
காலம் தவறி வந்தவளே...** தொலைத் தூர கல்வியைப் போல தூரத்து பார்வையிலேயே - எனக்குள் காதல் பயிரை உழுதவளே...** காதலை சொல்லிட கண்டிராத தெய்வங்களையெல்லாம் துணைக்கு அழைத்தேனே...** விருப்பம் இல்லையென்று எனை விட்டு போனாயே...** காதலின் அர்த்தம் சொல்ல வந்தவள் என்றிருந்தேனே - இன்று என் வாழ்கையின் அர்த்தத்தை அழித்து போனாயே...** கார்த்திக் பிரகாசம்...
என் கற்பனை கனலைக் கண் பார்வையை வீசி கிளறி விடுகிறாய்...!!! மனதிற்குள் முயன்று முயன்று அறுபட்டு முடங்கிய வார்த்தைகளுக்கு ஆசிக் கொடுத்து வாக்கியம் ஆக்குகிறாய்...!!!   என் நாதியற்ற எழுத்துக்களுக்கு உன் நாணத்தால் கௌரவ அந்தஸ்து ஏற்படுத்துகிறாய்...!!! உயிருக்குள் ஊனமாகிக் கிடக்கும் என் உணர்வுகளுக்கு பத்தியம் வைத்து வைத்தியம் பார்க்கிறாய்...!!! வெற்றிடமாக இருக்கும் என் இதயத்தை வேறொரு இடத்திற்கு பணி மாற்றம் செய்ய ஆணைப் பிறப்பிக்கிறாய்...!!! ஆதலால் உனக்கும் சேர்த்து துடிக்க என் இதயத்திற்கு உத்தரவு செய்து விட்டேன் - ஆனால் பெண்ணே நீ சுவாசித்த மூச்சுக் காற்றை மட்டும் எனக்கு சம்பளமாய் கொடுத்து விடு...!!!   கார்த்திக் பிரகாசம்...
நடுத்தர வர்க்கத்தின்     நாற்றங்கால் சேற்றில் சிக்கி தவிக்கும்     சிலப்பல  ஆத்மாக்களின் கால்கள் காலத்தை      கடக்க முடியாமல் கரையைத்  தொட        கண் தெரியாமல் "சிறகுகளை ஒடித்து        கனவுகளை ஊனமாக்கி... மூச்சுக் காற்றின் முதலுதவியால்        முனகிக் கொண்டிருக்கின்றனவே.." கார்த்திக் பிரகாசம்...

இதுவரை நான்...

வைரமுத்துவின் சரிதத்தை அவரின் கரை காணா கற்பனையை அகரத்தை ஆளும் அவரது வித்தையை மனத் திரையிலும் பசுமையை இன்னும் இழுத்து வைத்திருக்கும்  இயற்கையின் முயற்சியையும் கன்னித்தன்மையை இழந்து விட்ட குளங்களையும் மழை தரமாட்டேனென வீம்பு புடிக்கும் மேகங்களையும் கூடி கும்மாளமடித்து குதூகலித்துக் கொண்டிருக்கும் கன்றுகளையும் விதவையாய் தனித்து விடபட்ட மின் கம்பங்களையும் என் விழித்திரையில் விழுங்கி கொண்டு இரயிலின் ஜன்னல் ஓர இருக்கையின் இன்பத்தை இனவிருத்தி செய்து கொண்டிருக்கிறேன்...!!! கார்த்திக் பிரகாசம்...
உரிமை இல்லாதவர்களின் தலையில் கிரீடமாக இருக்க விரும்பவதை விட உரிமையானவர்களின் காலடியில் செருப்பாய் இருந்து செத்து விடலாம்...!!! கார்த்திக் பிரகாசம்...
அலுவலகத்தில் கணினியைக் கண்டு கண்டு கண்கள் மறத்து விட்டன...!!! விசைபலகையைத் தட்டி தட்டி விரல்கள் விறைத்து விட்டன...!!! சுட்டெலியை திட்டி திட்டி சுயங்கள் செத்து விட்டன...!!! உயிருள்ள சடலங்களெல்லாம் ஐஸ் பெட்டிக்குள் அடங்கி கொண்ட உயிரற்ற உடல்களாய் குளிர்சாதன அறைக்குள் சலனமே இல்லாமல் சஞ்சரிக்க பழகி விட்டன...!!! கார்த்திக் பிரகாசம்...
கனவுகளைத் துரத்திக் கொண்டு ஓட தான் ஆசை...!!! காலம் இரும்பு சங்கிலிகளால் கால்களை இறுக்கி நெருக்கி எகத்தாளமாக சிரிக்கின்றது...!!! காலத்தின் கால் மிதியில் கணக்கில்லாதவர்களின் கனவுகள் சாம்பலாகின்றன...!!! கார்த்திக் பிரகாசம்...