என்
கற்பனை கனலைக்
கண் பார்வையை வீசி
கிளறி விடுகிறாய்...!!!
மனதிற்குள்
முயன்று முயன்று அறுபட்டு
முடங்கிய வார்த்தைகளுக்கு
ஆசிக் கொடுத்து
வாக்கியம் ஆக்குகிறாய்...!!!
என்
நாதியற்ற எழுத்துக்களுக்கு
உன் நாணத்தால்
கௌரவ அந்தஸ்து
ஏற்படுத்துகிறாய்...!!!
உயிருக்குள்
ஊனமாகிக் கிடக்கும்
என் உணர்வுகளுக்கு
பத்தியம் வைத்து
வைத்தியம் பார்க்கிறாய்...!!!
வெற்றிடமாக இருக்கும்
என் இதயத்தை
வேறொரு இடத்திற்கு
பணி மாற்றம் செய்ய
ஆணைப் பிறப்பிக்கிறாய்...!!!
ஆதலால்
உனக்கும் சேர்த்து துடிக்க
என் இதயத்திற்கு உத்தரவு
செய்து விட்டேன் - ஆனால்
பெண்ணே
நீ சுவாசித்த மூச்சுக் காற்றை
மட்டும் எனக்கு சம்பளமாய்
கொடுத்து விடு...!!!
கார்த்திக் பிரகாசம்...
கற்பனை கனலைக்
கண் பார்வையை வீசி
கிளறி விடுகிறாய்...!!!
மனதிற்குள்
முயன்று முயன்று அறுபட்டு
முடங்கிய வார்த்தைகளுக்கு
ஆசிக் கொடுத்து
வாக்கியம் ஆக்குகிறாய்...!!!
என்
நாதியற்ற எழுத்துக்களுக்கு
உன் நாணத்தால்
கௌரவ அந்தஸ்து
ஏற்படுத்துகிறாய்...!!!
உயிருக்குள்
ஊனமாகிக் கிடக்கும்
என் உணர்வுகளுக்கு
பத்தியம் வைத்து
வைத்தியம் பார்க்கிறாய்...!!!
வெற்றிடமாக இருக்கும்
என் இதயத்தை
வேறொரு இடத்திற்கு
பணி மாற்றம் செய்ய
ஆணைப் பிறப்பிக்கிறாய்...!!!
ஆதலால்
உனக்கும் சேர்த்து துடிக்க
என் இதயத்திற்கு உத்தரவு
செய்து விட்டேன் - ஆனால்
பெண்ணே
நீ சுவாசித்த மூச்சுக் காற்றை
மட்டும் எனக்கு சம்பளமாய்
கொடுத்து விடு...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment