தாடியை
சோகத்தின்
அடையாளமாக
அறிவித்தவன்
யார்..?
ஒருவன்
தாடி வைத்தால்
எத்தனை
கேள்விகள்...!
காதல் தோல்வியா..?
வீட்டில் விரோதமா..?
பணப் பிரச்சினையா..?
மனதில் பாரமா..?
ஒரு வேளை
தாடி வைப்பது
தேசிய குற்றமோ..?
மகிழ்ச்சியான மனிதன்
தாடி வைப்பது
தனிமனித ஒழுக்கக்
கேடோ..?
இல்லை...!!
தாடி வைக்க
உண்மையான
காரணமான
காரணம்
மற்றவர்களுக்கு
தேவைப்படுகிறதோ..!
ஆனால்
தாடி வைக்க
காரணங்களா
தேவை..?
கன்னங்கள் தானே
தேவை..!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment