நம் முன்னோர்கள்
வாளுக்குத் தலை வணங்காமல்
துப்பாக்கியைக் கண்டு தூர ஓடாமல்
அதிகாரத்தைக் கண்டு அதிராமல்
அந்நியர்களைக் கண்டு அஞ்சாமல்
நெஞ்சை நிமிர்த்தி
செந்நீரை வாரி இறைத்து
துயில்களை துறந்து
இன்பங்களை இழந்து
துரோகங்களைத் துரத்தி
உயிரை வீரமாக விடுத்து
விழைந்த சுதந்திரம்.. .
போராடிப் பெற்ற
தேசத்தின் சுதந்திரத்தைப்
பேணிக் காத்திட
இருப்பாய் நீ நெருப்பாய்...
சுதந்திர தின வாழ்த்துக்கள்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment