Skip to main content

ஆறிலிருந்து அறுபது வரை...

பத்தாம் வகுப்பு...

        அவன் பெயர் மணி.. நன்றாக படிக்கக் கூடிய மாணவன்.. இருந்தாலும் கடைசிப் பெஞ்சில் அமர்ந்திருந்தான். அதற்கு அழகான ஒரு காரணமும் இருந்தது.. அவனுடைய அன்புத் தோழி அந்த வரிசையில் தான் அமர்ந்திருந்தாள். இருவரும் உண்மையான நட்பை ஒருவர் ஒருவர் மீது வைத்திருந்தனர். மணியின் மனதிலோ அவளைப் பற்றிய நினைவுகளே எப்பொழுதும் ஓடிக் கொண்டிருந்தன. இது "காதல்" தான் என்று மணி நம்பினான். அதை அவளிடம் எப்படியாவுது சொல்லி விட முயற்சித்தான். ஆனால் ஒருவித தயக்கம் அவன் மனதில் தடையாக தடுத்துக் கொண்டிருந்தது.. இதில் இறுதித் தேர்வுகள் முடிந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது..

பன்னிரெண்டாம் வகுப்பு...

        இரண்டு வருடங்கள் உருண்டோடி இருந்தன. அன்று பதினோராம் வகுப்பு மாணவர்கள் தங்களின் முன்னவர்களுக்கு பிரியா விடை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.  இன்று எப்படியாவது தன் காதலை சொல்லி விட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டான். அவளே அவனைத் தேடி வந்தாள். அருகில் வந்து,  "நீ தான் என்னுடைய மிகச் சிறந்த நண்பன்" என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டு சென்றாள். எங்கு தன் காதலைச் சொன்னால் அவளது நட்பை இழக்க  நேரிடுமோ என்று எண்ணி அன்று தன் காதலை சொல்லாமல் மனதிற்குள்ளே மறைத்துக் கொண்டான்..

கல்லூரி...

       எதிர்பார்த்த விதமாக இருவரும் ஒரே கல்லூரியில் தான் பட்டப் படிப்பு பயின்றனர். ஒரு முறை அவளிடம், சீனியர்கள் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றனர்.. இதை அவள் அவனிடம் அழுதுக் கொண்டே கூறினாள். அவன் அவளை தன் தோளில் சாய்த்து ஆறுதல் கூறினான்.. ஆனால் அவன் மனதிற்குள் அப்பொழுதே அவளைக் கட்டி அணைத்து தன் காதலை சொல்ல வேண்டும் என்றிருந்தது..   அவளது நட்பை இழக்க  நேரிடுமோ என்று எண்ணி அன்றும் தன் காதலை சொல்லாமல் மனதிற்குள்ளே மறைத்துக் கொண்டான்...

திருமணம்...
 
     அன்று அவளுக்கு திருமணம்.. அவள் நண்பர்களிலேயே மணி மட்டும் தான் திருமணத்திற்கு சென்றிருந்தான். கல்யாணப் புடவையில் வழக்கத்தை விட மிகவும் அழகாக இருந்தாள்.. திருமணத்திற்கு வந்ததற்காக அவள் மணிக்கு நன்றி சொல்லி அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.. அன்றாவுது காதலைச் சொல்ல எண்ணி அவள் மகிழ்ச்சியைப் பார்த்து தன் மனதை மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்...

      வருடங்கள் வாய்க்காலில் வழிந்தோடும் தண்ணீரைப் போல ஓடின.. பல வருடங்களுக்கு பிறகு அவள் இறந்து விட்டாள் என்று செய்தி காற்றில் பறந்து வந்தது.. தாங்க முடியா துக்கத்தில் மணி அவளின் இறுதிச் சடங்கிற்கு சென்றான்..

இறுதிச் சடங்கு...

       மணி அவளின் இறுதிச் சடங்கு நடக்கும் இடத்திருக்குச் சென்றான்.. அவளின் மகன் மகள்களைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதான்.. அவளின் மகன், மணியிடம் வந்து பேசினான்.. நீங்கள் கண்டிப்பாக வருவீர்கள் என்றும், அவ்வாறு நீங்கள் வரும் பட்சத்தில் இந்த டைரியை உங்களிடம் கொடுக்கும்படி சொன்னதாகவும் கூறினான்..

       மணி அந்த டைரியை பொக்கிஷமாக நினைத்தான்.. பூவின் கையெழுத்தில் தீட்டப்பட்ட  அந்த காவியத்தை, காதலாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட அந்த பக்கங்களை இமைகளுக்கு ஓய்வு கொடுக்காமல் கண்களில் படர விட்டான்..

       ஒவ்வொரு வரியும் அவளது நினைவுகளையும் அவனது கண்ணீரையும் சலவை செய்துக் கொண்டிருந்தன.

       அவள் எழுதி இருந்தாள்.. ""... வா மணி. நீ வருவாய் என்று எனக்கு தெரியும்...  உண்மையில் நான் ஒரு தோற்றுப் போனவள். உன்னை மிகவும் நேசித்தேன்.. நேசிக்கிறேன்.. ஒரு நண்பன் என்ற அளவில் மட்டும் என் வாழ்வில் நீ இருக்கவில்லை.. என் வாழ்வில் எனக்கு நேர்ந்த மிக உன்னதமான உண்மையான அன்பு நீ.. பத்தாம் வகுப்பு படிக்கும் போதே என் காதலை உனக்கு சொல்லி விட நினைத்தேன்.. அன்று முதல் எத்தனையோ தருணங்களில் என் காதலை வெளிபடுத்த முயன்று ஒரு வித தயக்கத்தினால் சொல்லவில்லை.. எனக்கு திருமணம் நிச்சியக்கப்பட்ட போது கூட, உன்னை கட்டிப்பிடித்து எனக்கு உன்னை பிடித்திருக்கிறது... மீதமுள்ள என் வாழ்நாட்கள்  உன்னோடுதான் இருக்க வேண்டும் என்று கதற வேண்டும் போலிருந்தது.. எங்கு காதலை சொல்லி உன்னையும் உன் நட்பையும் இழக்க நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் என் காதலை என் மனத்திற்குள்ளே மடித்து விட முயற்சித்திருந்தேன்.. ஆனால் முடியவில்லை.. சொல்லி மறுக்கபடுவதை விட சொல்லாமல் மறந்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டேன்.. இத்துனை நாள் என் உடலும் உயிரும் மட்டும் தான் இன்னொருவனுக்காக வாழ்ந்துக் கொண்டிருந்தது.. ஆனால் என் மனதும், என் நினைவுகளும் உன்னாலேயே வாழ்ந்துக் கொண்டிருந்தன..

     இப்பொழுதும் சொல்லவில்லையென்றால் இறந்தும் என்னால் நிம்மதியாக இருக்க இயலாது.. ஆதலால் என் பல வருட சுமையை இப்பொழுதாவுது சற்று இறக்கி வைக்க நினைக்கிறேன்.. நான் என் வாழ்வை விட உன்னை அதிகமாக நேசிக்கிறேன்.. உன் நினைவுகளோடு நினைவுகளாக வாழ்ந்ததால் இந்த வாழ்வும் எனக்கு இனிக்கிறது...

      என்று எழுதி இருந்தது.. படித்து முடித்த தருணத்தில் மணியின் கண்களில் கண்ணீர் காட்டு வெள்ளம் போல திரண்டிருந்தது..

      கண்ணீரைத் தன் காதலுக்கு காணிக்கையாக்கி அந்த டைரியை நெஞ்சுக்குள் புதைத்து, தன் விதியையும் காதலையும் நினைத்து அழுதுக் கொண்டே உயிரை அங்கேயே விட்டு விட்டு நீங்கா நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு சென்றான் மணி...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...