"அம்மா.. ரொம்ப பசிக்குது.. குடிக்க கஞ்சி எடுத்து குடு மா.."" என்று அவசர அவசரமாகக் கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் மணி..
சரஸ்வதி வாயைத் திறந்து எதுவும் சொல்லாமல் அமைதியாக முதுகை முன் வாசலுக்குக் காட்டி அமர்ந்திருந்தாள்..
மணி சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு, அம்மா நீ சீக்கிரம் கஞ்சி எடுத்து வை. நான் வாசல்ல போய் வானத்துல நிலா வந்திருச்சான்னு பாக்குறேன் என்று சொல்லிவிட்டு வாசலில் வந்து நின்று, நிலா வராததைக் கண்டு "..ரொம்ப பசிக்குது நிலா.. நீ சீக்கிரம் வா.. நீ வந்த தான் சாப்பிட முடியும் என்று.." வானத்தையே பார்த்து பேசிக் கொண்டிருந்தான் மணி..
பாவம் சரஸ்வதி மட்டும் என்ன செய்வாள். அவளும் முழுதாய் மூணு வேளை சாப்பிட்டது அவள் கணவன் உயிரோடு இருக்கும் வரை தான்.. அவன் ஒரு நாள் அதிகமாக குடித்து விட்டு போதையில் லாரியில் மோதி அடிபட்ட இடத்திலேயே இறந்து விட்டான்.. அந்த நாள் முதலே அடுத்த வேளை கஞ்சிக்கே அவதிப்படும் நிலை தான் அவளுக்கு.. மணி வேற சின்னப் பையன். அப்பா இறக்கும் போது அவனுக்கு நினைவுக் கூட தெரியாது.. நிலைமைத் தெரியாமல் "பசிக்குது மா பசிக்குது மா .." என்று பசியால் துடித்துக் கொண்டே இருப்பான்.
கஞ்சி இருக்கும் வேளையில் நிலவைப் பார்த்துக் கொண்டே இருவரும் சாப்பிடுவது தான் வழக்கம். அதனால் தான், மணி வாசலில் நின்றுக் கொண்டு நிலாவின் வருகைக்காக வயிற்றில் பசியுடன் காத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அந்த சின்னச்சிறு பிஞ்சுக்குத் தெரியவில்லை.. ""இன்று அமாவாசை ஆதலால் நிலா வரப் போவதுமில்லை. தன் வயிறு நிறைய போவதுமில்லை..
வழக்கம் போல் அன்றும் தன் நிலையை நினைத்து, விதியின் தீராத தாகத்தைத் தன் கண்ணீரால் தீர்க்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் சரஸ்வதி....
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment