Skip to main content

Posts

Showing posts from December, 2015

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...
உன் மௌன இரைச்சலினால் என் மனதில் கண்ணீர் ஓலங்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...
ஏழைப் பெண்ணின்  நெற்றியில் வீற்றிற்கும் ஒற்றைப் பொட்டு போல யாதுமில்லாமல் அனாதையாக  இருக்கும் வானை ஆடம்பரம் இல்லாமல்  அலங்கரித்துக் கொண்டிருக்கிறது பௌர்ணமி நிலவு...!!! கார்த்திக் பிரகாசம்...
மணிக்கு முப்பது வயதாகி விட்டது.. அவன் பெண் பார்க்காத இடம் இல்லை. நல்ல கம்பெனியில், அதிக சம்பளம் கொடுக்கக் கூடிய வேலையில் இருந்தும் அவனுக்கு பெண் தர யாரும் முன் வரவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. மணிக்கு ஐந்து வயதிருக்கும் போதே அவனது பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்து விட்டனர். ஐந்து வயதிலேயே அனாதையான மணியை, அவனது உறவினர்களும்  கை விட்டனர். பெற்றோரையே இறந்த பிறகு, தன்னைக் கைவிட்ட  உறவினர்களுக்காகப் பெரிதும் கவலைப்படாமல் அந்த ஊரை விட்டே வந்து விட்டான் மணி. ஊரை விட்டு வந்த மணி, ஒரு டீக்கடையில்  வேலைக்கு சேர்ந்தான். போகப் போக அந்த டீக்கடையே அவனுக்கு நிரந்தர ஆறுதலானது.. டீக்கடையில் வேலை செய்யும் ஒருவரின் உதவியுடன் பகுதி நேர பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தான்.. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தான். பெரிய கல்லூரியொன்றில் உதவித் தொகையுடன் படிக்கும் வாய்ப்பு மணிக்குக் கிடைத்தது. வேலைச் செய்த டீக்கடையில் இருந்து விலகிக் கல்லூரி சேர்ந்தான். கல்லூரி இறுதி ஆண்டில் நல்ல கம்பெனியில் வேலைக் கிடைத்தது. நல்ல வேலைக் கிடைத்து விட்டது. அடுத்து என்ன..! அவனுக்கென்று வாழ்...

சுனாமி நினைவு தினம்...

எங்கள் பசியை ஒருபோதும் தீர்க்க முடியாதென்று உன் பசியை ஒரே நாளில் தீர்த்துக் கொண்டாயோ...??? உயர்ந்தெழுந்த ஆழிப் பேரலைகள் உயிரை அழிக்கப் போகும் போர்ப் பறைகளென அறியாமல் போனோமே...!!! தாயே தன் பிள்ளைகளைக் கொல்லத் துணிவாளென கனவிலும் கண்டுணர்ந்ததில்லையே...!!! ஜலத்தினால் சாந்தியாய் இருந்த எங்கள் வாழ்வு ஜலத்திலையே சமாதியடையுமென்று ஜென்மத்திலும் நினைக்கவில்லையே...!!! கருணை உள்ளம் கொண்டே கடல் தாயே...!!! நீ அள்ளிச் சென்ற என் தந்தையிடம் சொல் உன் மகள் அங்கு அனாதையாய் அழுதுக் கொண்டிருக்கிறாளென்று...!!! நீ தூக்கிச் சென்ற என் தாயிடம் சொல் உன் மகள் பெரிய மனுஷி ஆனது கூட தெரியாமல் தெரியப்படுத்த சொந்தமும் இல்லாமல் தெருக்களிலே திரிந்துக் கொண்டிருக்கிறாளென்று...!!! நீ சுழட்டிச் சென்ற என் சகோதரனிடம் சொல் உன் சகோதரி சண்டைப் போட ஆளில்லாமல் காற்றிடம் தனியாக கதைப் பேசிக் கொண்டிருக்கிறாளென்று...!!! கடல் மாதாவே...!!! சொந்தங்களை இழந்து இப்பொழுது தான் மீண்டு வந்துக் கொண்டிருக்கிறோம் இதுப் போன்ற சோதனைகளைத் தர ஒருபோதும் நீ மீண்டும் வந்து விடாதே...!!! கார்த்திக் பிரகாசம்....
"இஸ்லாமியர்களெல்லாம் தீவிரவாதிகள் அல்ல.. எல்லா தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் அல்ல" என்பதை உலகுக்கு உரக்க உரைக்கும் சம்பவமொன்று கென்யாவில் நடந்துள்ளது. கென்யாவில் பேருந்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பேருந்தில் கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் இருந்துள்ளனர்.. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த போகின்றனர் என்று யூகித்த பேருந்தில் இருந்த இஸ்லாமியர்கள், தங்கள் வைத்திருந்த உடைகளை உடனடியாக கிறித்துவர்களுக்கு அணியக் கொடுத்துள்ளனர். பேருந்தில்  ஏறிய தீவிரவாதி, இஸ்லாமியர்கள் தனியாகவும் கிறித்துவர்கள் தனியாகவும் நிற்கும் படி கையில் துப்பாகியுடன் மிரட்டியுள்ளான். அதற்கு மறுத்த இஸ்லாமியர்கள், 'சுடுவதாக இருந்தால் எங்கள் அனைவரையும் ஒன்றாக சுடுங்கள் அல்லது விடுதலை செய்வதாக இருந்தாலும் எங்கள் அனைவரையும் ஒன்றாக விடுதலை செய்யுங்கள்' என்று கூறியுள்ளனர்.. இதனால் வெறுப்படைந்த தீவிரவாதிகள், உங்களை பிறகு பார்த்து கொள்கிறேன் என்று கிறித்துவர்களைப் பார்த்து எச்சரிக்கை செய்து விட்டு பேருந்தில் இருந்து இறங்கி சென்றுள்ளனர்.. பேருந்தில் இருந்த இஸ்லாமி...
மேடு பள்ளங்கள் தடுக்கும் போதும் கல் பாறைகள் தாக்கும் போதும் எவ்வித சலனமும் இன்றி ஆற்றின் போக்கில் அடித்துப் போகும் இலையைப் போல் அவமானங்கள் அரங்கேறும் போதும் சந்தோசங்கள் சங்கடங்கள் சாய்க்கும் போதும் தருணங்களில் மூழ்கி விடாமல் உடைந்து வீழ்ந்து விடாமல் வீழ்ந்தாலும் தளர்ந்து விடாமல் சகல சூழ்நிலைகளையும் சந்(சா)தித்து உலவினால் வாழ்க்கை சமுத்திரத்தில் நம் சங்கமத்திற்கென்றும் தனிப் பாதை தானாக தோன்றும்...!!! கார்த்திக் பிரகாசம்...
சுயநிலை மறந்து தன் கனவுகளில் திளைத்திருப்பது வாழ்வதை விட சுகமானது...!!! கார்த்திக் பிரகாசம்...
குண்டுக் குழிகளில் குதித்திறங்கி கர்ப்பம் கலைந்த காரிகையின் வயிறாய் குறை(கரை)ந்து போனது பேருந்தின் முன் சக்கர வட்டகை...!!! கார்த்திக் பிரகாசம்...

காற்று...

சுத்த காய்கறிகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்த காலம் போய், இப்பொழுது சுத்தமானக் காற்றை ஏற்றுமதி செய்யும் காலம் வந்துவிட்டது. சுத்தமான காற்றை பிற நாட்டிலிருந்து வாங்கி சுவாசிக்கும் அளவிற்கு அவசியம் ஏற்பட தொடங்கிவிட்டது என்றால் நம்ப முடிகிறதா...! நம்பித்தான் ஆக வேண்டும். ஆம். தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் சீனாவிற்குத் தான் இந்த நிலை. தொழில் துறையில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், கூடவே காற்றும் பெருமளவில் மாசடைந்து வருகின்றது. அதிகரித்து வரும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையினாலும், வாகன பயன்பாட்டாலும் அம்மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் "விடாலிட்டி ஏர்" என்ற கனடா நாட்டு நிறுவனம் பான்ஃப் மற்றும் லேக் லூயிஸ் போன்ற அந்நாட்டு மலைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான காற்றை பாட்டிலில் அடைத்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்துவருகிறது. ஏற்கனவே நம் நாட்டில், தங்கள் அணைகளில் உள்ள தண்ணீரை பகிர்வதிலும், உற்பத்தி செய்த மின்சாரத்தைக் கொடுப்பதிலும், புது அணைக் கட்டுவதிலும் மாநிலங்களுக்குக்கிடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டு கொண்டிருக்கிறது.. இதில், இனி வரப் ப...
மூன்று வருடங்களுக்கு முன் டெல்லி தலைநகரில், ஓடும் பேருந்தில் சில சமூக துரோகிகளால் கற்பழிக்கப்பட்டு, ஆடையின்றி சாலையில் தூக்கி எறியபட்டாள் ஒரு பெண்.. அந்த கொட்டும் குளிர்ச் சாமத்தில், பெண்ணாகப் பிறந்ததைத் தவிர வேறெந்த பாவமும் அறியாத ஒரு மலர், அதன் இலையோடு சேர்த்து கிள்ளி எறியப்பட்டது... மூன்று வருடங்களாய் "நிர்பையா" என்று ஊடகங்களால் அறியப்பட்ட அந்த மலரின் பெயரை, நேற்று நடந்த மூன்றாம் ஆண்டு இரங்கல் கூட்டத்தில், அந்த பெண்ணின் உண்மையான பெயரை, அவருடைய தாயார் ஊடகங்களின் முன்னால் முதன் முறையாக அறிவித்தார்... ஆறு தீயவர்களால் பாதியிலேயே அணைக்கப்பட்ட அந்த தீபத்தின் பெயர் "ஜோதி சிங்". இந்திய வரலாற்று புத்தகத்தின் சில பக்கங்களை இந்த பெயர், செந்நீரால் நிரப்பபட்ட செங்கோலால் சிதைத்து விட்டது... காலங்கள் ஓடிவிட்டன காயங்கள் ஆறிவிட்டன ஆனால் தழும்புகள் மறையவில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
அலுவலக நேரங்களில் ஆளுநர் மாளிகையில் இருந்து  அண்ணா பல்கலைகழகத்தைக் கடப்பதிலையே சென்னை வாசிகளின் அரை ஆயுட் காலம் முடிந்து விடும் போலிருக்கிறது.அதிலும் டைடல் பார்க்கைத் தாண்டி யாராவது செல்ல வேண்டும் என்றால் காலையில் வீட்டிலிருந்து கிளம்பு போது தங்கள் இஷ்ட தெய்வத்தைக் கும்பிட்டு விட்டு தான் வர வேண்டும். இன்னைகாவுது அலுவலகத்திற்குச் சீக்கிரம் செல்லலாம் என்றால் முடியவில்லை. சரி. மாலையில் அலுவலகம் முடிந்தாவுது வீட்டை   சீக்கிரம் அடையலாம் என்றால் அதுவும் முடியவில்லை.. பேருந்தும், போக்குவரத்து நெரிசல்களுமே, சென்னை வாசிகளின் சராசரி ஆயுட் காலத்தில் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.. கார்த்திக் பிரகாசம்...
பயன்படவில்லை என்பதை விட சிலர் பயன்படுத்தபடுவதில்லை என்பதே நிதர்சனம்...!!! கார்த்திக் பிரகாசம்...

பீப் பாடல் - சலசலப்பு

நடிகர் சிலம்பரசன் பெண்களைப் பற்றி பாடிய அந்த பாடல் வலைத்தளத்தில் வெளியான நாள் முதல் அந்த பாடலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலைத்தள வாசிகளிடையே தினம்தினம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.. ஒருபுறம் பாடல் பிடித்திருந்தால் கேளுங்கள். பிடிக்காவிட்டால் விட்டுவிட்டு வேற வேலையைப் பாருங்கள் என்று சில நபர்களால் கருத்து சொல்லப்பட்டு வரப்படுகிறது. மறுபுறம் மாதர் சங்கம், பெண்கள் அமைப்பு என்று பெண்களை இழிவாகவும், கொச்சை வார்த்தைகளாலும் பாடியதற்காக சிலம்பரசன் மீது எதிர்ப்புகளும் கடுமையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தை ஒரு நடிகர் சமந்தப்பட்ட தனிப்பட்ட பிரச்சனையாக மட்டும் எடுத்து கொள்ள முடியவில்லை. இதை ஒரு சமூக பிரச்சனையாகத் தான் காண முடிகிறது. நம் நாட்டை பொறுத்தவரையில், நடிகர் என்பவரை வெறும் நடிகராக மட்டும் மக்களால் பார்க்கபடுவதில்லை. தனக்கு பிடித்த நடிகரை தன் குடும்பத்தில் ஒருவராகவும், அந்த நடிகர், படத்தில் சொல்வதையெல்லாம் உயிர் மூச்சாக கருதி, வாழ்க்கையில் பின்பற்றுபவர்கள் தான் நம் நாட்டில் ஏராளம். தன் வீட்டின் சொந்த சுப நிகழ்ச்சி அழைப்பிதல்களிலும்,பேனர்களிலும் கூட தனக்க...
மணியும் பிரியாவும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தனர்.. மணி பிரியாவின் மீது உயிரையே வைத்திருந்தான். பிரியாவும் மணியை தன் வாழ்வில் கிடைத்த மிக பெரிய பொக்கிஷமாக நினைத்தாள்.. பிரியாவின் தந்தை, அவர்களின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவரும் பிரிய நேர்ந்தது.. பிரியாவின் பிரிவை ஏற்க முடியாத மணி, தினமும் கதறி அழுதான். தன்னை பிரிந்ததற்காக பிரியாவைத் தினம்தினம் திட்டி தீர்த்தான்.. வருடங்கள் வயதுக்கு வந்த பெண்ணின் முகப்பருக்களைப் போல வேகமாக முதுமை அடைந்தன. பிரியாவின் நினைவிலிருந்து ஓரளவு மீண்டு வந்திருந்த மணி வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.. அவர்கள் அழகான குழந்தையையும் ஈன்றனர். மெல்ல மெல்ல பிரியாவை  முற்றிலுமாக மறந்த மணி, தொழிலில் சிறந்து விளங்கினான்.. சொத்துக்கள் பல சேர்த்தான்.. ஒரு நாள், மணிக்கும் மரணம் அவன் வீட்டைத் தேடி வந்தது. மரணப் படுக்கையில் மணி, இந்த வாழ்கையை அளித்ததற்காக கடவுளுக்கு நன்றி சொன்னான். தன் மனைவியைச் சந்திக்கும் முன் வரை, தொழிலில் தோற்று இருக்கிறேன்.. இவள் இல்லை என்றால் எனக்கு வாழ்க்கையே இல்லை என்று நினைத்த பெண்ணை இழந்திருக்கிறேன...