எங்கள் பசியை ஒருபோதும்
தீர்க்க முடியாதென்று
உன் பசியை ஒரே நாளில்
தீர்த்துக் கொண்டாயோ...???
உயர்ந்தெழுந்த ஆழிப் பேரலைகள்
உயிரை அழிக்கப் போகும்
போர்ப் பறைகளென
அறியாமல் போனோமே...!!!
தாயே தன் பிள்ளைகளைக்
கொல்லத் துணிவாளென
கனவிலும் கண்டுணர்ந்ததில்லையே...!!!
ஜலத்தினால் சாந்தியாய் இருந்த
எங்கள் வாழ்வு
ஜலத்திலையே சமாதியடையுமென்று
ஜென்மத்திலும் நினைக்கவில்லையே...!!!
கருணை உள்ளம் கொண்டே
கடல் தாயே...!!!
நீ அள்ளிச் சென்ற
என் தந்தையிடம் சொல்
உன் மகள் அங்கு அனாதையாய்
அழுதுக் கொண்டிருக்கிறாளென்று...!!!
நீ தூக்கிச் சென்ற
என் தாயிடம் சொல்
உன் மகள் பெரிய மனுஷி ஆனது கூட
தெரியாமல் தெரியப்படுத்த சொந்தமும்
இல்லாமல் தெருக்களிலே
திரிந்துக் கொண்டிருக்கிறாளென்று...!!!
நீ சுழட்டிச் சென்ற
என் சகோதரனிடம் சொல்
உன் சகோதரி சண்டைப் போட
ஆளில்லாமல் காற்றிடம் தனியாக
கதைப் பேசிக் கொண்டிருக்கிறாளென்று...!!!
கடல் மாதாவே...!!!
சொந்தங்களை இழந்து இப்பொழுது தான்
மீண்டு வந்துக் கொண்டிருக்கிறோம்
இதுப் போன்ற சோதனைகளைத் தர
ஒருபோதும்
நீ மீண்டும்
வந்து விடாதே...!!!
கார்த்திக் பிரகாசம்...
தீர்க்க முடியாதென்று
உன் பசியை ஒரே நாளில்
தீர்த்துக் கொண்டாயோ...???
உயர்ந்தெழுந்த ஆழிப் பேரலைகள்
உயிரை அழிக்கப் போகும்
போர்ப் பறைகளென
அறியாமல் போனோமே...!!!
தாயே தன் பிள்ளைகளைக்
கொல்லத் துணிவாளென
கனவிலும் கண்டுணர்ந்ததில்லையே...!!!
ஜலத்தினால் சாந்தியாய் இருந்த
எங்கள் வாழ்வு
ஜலத்திலையே சமாதியடையுமென்று
ஜென்மத்திலும் நினைக்கவில்லையே...!!!
கருணை உள்ளம் கொண்டே
கடல் தாயே...!!!
நீ அள்ளிச் சென்ற
என் தந்தையிடம் சொல்
உன் மகள் அங்கு அனாதையாய்
அழுதுக் கொண்டிருக்கிறாளென்று...!!!
நீ தூக்கிச் சென்ற
என் தாயிடம் சொல்
உன் மகள் பெரிய மனுஷி ஆனது கூட
தெரியாமல் தெரியப்படுத்த சொந்தமும்
இல்லாமல் தெருக்களிலே
திரிந்துக் கொண்டிருக்கிறாளென்று...!!!
நீ சுழட்டிச் சென்ற
என் சகோதரனிடம் சொல்
உன் சகோதரி சண்டைப் போட
ஆளில்லாமல் காற்றிடம் தனியாக
கதைப் பேசிக் கொண்டிருக்கிறாளென்று...!!!
கடல் மாதாவே...!!!
சொந்தங்களை இழந்து இப்பொழுது தான்
மீண்டு வந்துக் கொண்டிருக்கிறோம்
இதுப் போன்ற சோதனைகளைத் தர
ஒருபோதும்
நீ மீண்டும்
வந்து விடாதே...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment