மூன்று வருடங்களுக்கு முன் டெல்லி தலைநகரில், ஓடும் பேருந்தில் சில சமூக துரோகிகளால் கற்பழிக்கப்பட்டு, ஆடையின்றி சாலையில் தூக்கி எறியபட்டாள் ஒரு பெண்.. அந்த கொட்டும் குளிர்ச் சாமத்தில், பெண்ணாகப் பிறந்ததைத் தவிர வேறெந்த பாவமும் அறியாத ஒரு மலர், அதன் இலையோடு சேர்த்து கிள்ளி எறியப்பட்டது...
மூன்று வருடங்களாய் "நிர்பையா" என்று ஊடகங்களால் அறியப்பட்ட அந்த மலரின் பெயரை, நேற்று நடந்த மூன்றாம் ஆண்டு இரங்கல் கூட்டத்தில், அந்த பெண்ணின் உண்மையான பெயரை, அவருடைய தாயார் ஊடகங்களின் முன்னால் முதன் முறையாக அறிவித்தார்...
ஆறு தீயவர்களால் பாதியிலேயே அணைக்கப்பட்ட அந்த தீபத்தின் பெயர் "ஜோதி சிங்". இந்திய வரலாற்று புத்தகத்தின் சில பக்கங்களை இந்த பெயர், செந்நீரால் நிரப்பபட்ட செங்கோலால் சிதைத்து விட்டது...
காலங்கள் ஓடிவிட்டன
காயங்கள் ஆறிவிட்டன
ஆனால் தழும்புகள் மறையவில்லை...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment