"இஸ்லாமியர்களெல்லாம் தீவிரவாதிகள் அல்ல.. எல்லா தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் அல்ல" என்பதை உலகுக்கு உரக்க உரைக்கும் சம்பவமொன்று கென்யாவில் நடந்துள்ளது.
கென்யாவில் பேருந்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பேருந்தில் கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் இருந்துள்ளனர்.. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த போகின்றனர் என்று யூகித்த பேருந்தில் இருந்த இஸ்லாமியர்கள், தங்கள் வைத்திருந்த உடைகளை உடனடியாக கிறித்துவர்களுக்கு அணியக் கொடுத்துள்ளனர்.
பேருந்தில் ஏறிய தீவிரவாதி, இஸ்லாமியர்கள் தனியாகவும் கிறித்துவர்கள் தனியாகவும் நிற்கும் படி கையில் துப்பாகியுடன் மிரட்டியுள்ளான். அதற்கு மறுத்த இஸ்லாமியர்கள், 'சுடுவதாக இருந்தால் எங்கள் அனைவரையும் ஒன்றாக சுடுங்கள் அல்லது விடுதலை செய்வதாக இருந்தாலும் எங்கள் அனைவரையும் ஒன்றாக விடுதலை செய்யுங்கள்' என்று கூறியுள்ளனர்..
இதனால் வெறுப்படைந்த தீவிரவாதிகள், உங்களை பிறகு பார்த்து கொள்கிறேன் என்று கிறித்துவர்களைப் பார்த்து எச்சரிக்கை செய்து விட்டு பேருந்தில் இருந்து இறங்கி சென்றுள்ளனர்..
பேருந்தில் இருந்த இஸ்லாமியர்களின் இந்த செயலினால், பல கிறித்துவர்களின் உயிர் காப்பற்றப்பட்டுள்ளது.. மதமா..? மனிதமா..? என்ற போராட்டத்தில் மனிதம் இன்று வென்றுள்ளது...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment