மணியும் பிரியாவும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தனர்.. மணி பிரியாவின் மீது உயிரையே வைத்திருந்தான். பிரியாவும் மணியை தன் வாழ்வில் கிடைத்த மிக பெரிய பொக்கிஷமாக நினைத்தாள்..
பிரியாவின் தந்தை, அவர்களின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவரும் பிரிய நேர்ந்தது..
பிரியாவின் பிரிவை ஏற்க முடியாத மணி, தினமும் கதறி அழுதான். தன்னை பிரிந்ததற்காக பிரியாவைத் தினம்தினம் திட்டி தீர்த்தான்..
வருடங்கள் வயதுக்கு வந்த பெண்ணின் முகப்பருக்களைப் போல வேகமாக முதுமை அடைந்தன. பிரியாவின் நினைவிலிருந்து ஓரளவு மீண்டு வந்திருந்த மணி வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்..
அவர்கள் அழகான குழந்தையையும் ஈன்றனர். மெல்ல மெல்ல பிரியாவை முற்றிலுமாக மறந்த மணி, தொழிலில் சிறந்து விளங்கினான்.. சொத்துக்கள் பல சேர்த்தான்..
ஒரு நாள், மணிக்கும் மரணம் அவன் வீட்டைத் தேடி வந்தது. மரணப் படுக்கையில் மணி, இந்த வாழ்கையை அளித்ததற்காக கடவுளுக்கு நன்றி சொன்னான்.
தன் மனைவியைச் சந்திக்கும் முன் வரை, தொழிலில் தோற்று இருக்கிறேன்.. இவள் இல்லை என்றால் எனக்கு வாழ்க்கையே இல்லை என்று நினைத்த பெண்ணை இழந்திருக்கிறேன்.. அவளை இழந்த பிறகு மகிழ்ச்சி என்ற ஒன்றை மனக் கண்ணால் கூட காண முடியாது என்று நினைத்திருந்தேன்..
ஆனால் என் மனைவியைக் கண்டவுடன், என் வாழ்வில் அனைத்தும் எப்படி மாறியது..? என்று மணி கடவுளிடம் கேட்டான்.
கடவுள் சிரித்துக் கொண்டே சாந்தமாக சொன்னார்.. சிலரின் வேண்டுதல்கள் எப்பொழுதுமே தன்னலத்திற்காக மட்டும் இருக்கும்.. ஆனால் சிலரின் வேண்டுதல்கள் மட்டுமே தன்னை விரும்பியர்வர்களின் நலத்திற்காக இருக்கும்..
அவ்வாறு உன்னை தன் உயிராய் நினைத்து காலம் முழுதும் வாழ்ந்த ஒரு பெண் ஆத்மாவின் வேண்டுதல்களைத் தான் நான் நிறைவு செய்தேன்.. அந்த ஆத்மாவின் வேண்டுதல்கள் தான் உன் அன்பு மனைவியும், அழகான குழந்தையும் மற்றும் தொழில் முன்னேற்றமும்.
தனக்காக ஒருபோதும் ஒன்றும் வேண்டாமல், உனக்காக மட்டுமே வேண்டிக் கொண்ட, முள் இல்லாத ரோஜாவான உன் காதலியின் வேண்டுதல்கள் தான் இப்பிறவியில் உனக்கு நான் கொடுத்த வாழ்க்கை என்று கடவுள் சொன்னார்..
உயிர் பிரியும் தருணத்தில், மணியின் மனக் கண்ணில் பிரியாவின் நினைவுகள் நீர்த்தெழுந்தது. முகக் கண்ணில் கண்ணீர் உயிர்த்தெழுந்தது. காதல் கண்ணீர் கரையை உடைத்தது..
பொழுது முடிந்தது... மணியின் உயிர் பிரிந்தது...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment