சுத்த காய்கறிகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்த காலம் போய், இப்பொழுது சுத்தமானக் காற்றை ஏற்றுமதி செய்யும் காலம் வந்துவிட்டது.
சுத்தமான காற்றை பிற நாட்டிலிருந்து வாங்கி சுவாசிக்கும் அளவிற்கு அவசியம் ஏற்பட தொடங்கிவிட்டது என்றால் நம்ப முடிகிறதா...! நம்பித்தான் ஆக வேண்டும்.
ஆம். தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் சீனாவிற்குத் தான் இந்த நிலை. தொழில் துறையில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், கூடவே காற்றும் பெருமளவில் மாசடைந்து வருகின்றது. அதிகரித்து வரும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையினாலும், வாகன பயன்பாட்டாலும் அம்மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் "விடாலிட்டி ஏர்" என்ற கனடா நாட்டு நிறுவனம் பான்ஃப் மற்றும் லேக் லூயிஸ் போன்ற அந்நாட்டு மலைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான காற்றை பாட்டிலில் அடைத்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்துவருகிறது.
ஏற்கனவே நம் நாட்டில், தங்கள் அணைகளில் உள்ள தண்ணீரை பகிர்வதிலும், உற்பத்தி செய்த மின்சாரத்தைக் கொடுப்பதிலும், புது அணைக் கட்டுவதிலும் மாநிலங்களுக்குக்கிடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டு கொண்டிருக்கிறது..
இதில், இனி வரப் போகும் காலங்களில் "சுவாசிக்கும் காற்றையும் கடன் கேட்க நேரலாம், காற்றை காசு கொடுத்து வாங்கி சுவாசிக்கும் சுழல் ஏற்படலாம், சுத்தமான காற்றுக்காக அயல் நாட்டிடம், அணு சக்தி ஒப்பந்தம் போல் காற்று ஒப்பந்தம் போடப்படலாம் " என்றெல்லாம் என்னும் போதே ஆழமாக சுவாசித்த மூச்சுக் காற்று நீளமாக சுருங்கிப் போகிறது...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment