தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துக்களுக்கான கட்டணம் கடந்த ஞாயிற்றுக் கிழமை(17/10/2016) அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட 50% க்கும் மேல் அதிகமாக உள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கும்படி ஒரு தொலைப்பேசி எண்(044-32000090) குறிப்பிடப்பட்டுள்ளது
ஒருவேளை எங்கேயாவது மறைமுகமாகவோ அல்லது ஒரு சிலரோ தவறு செய்தால் அதைக் கண்டிக்க புகார் அளிக்கலாம். எல்லாருக்கும் தெரிந்தே பகிரங்கமாக இப்படியொரு பகல் கொள்ளை நடக்கும் போது யாரிடம் புகார் செய்ய முடியும். ஏனென்றால் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிந்தே இது நடக்கிறது
பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போயிட்டு வர மட்டும் 1500 முதல் 2000 செலவாகும் என்ற நிலையில், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த 8000, 10000 என சம்பாதிக்கும் சாமானியனியர்களின் பரிதாப நிலையினைக் கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும்.
புனலைப் போன்ற சென்னையில், அதன் அகன்ற பகுதியில் தனது வாழ்க்கையை லட்சக்கணக்கானோர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுப் போன்ற பண்டிகை அல்லது முக்கியமான நாட்களில், அதேப் புனல் மையப்பகுதிக்கு கீழ் குறுகும் போது அதற்குள் திணிக்கப்பட்டு நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
அந்த நெருக்கடியில் சிக்கி சின்னாபின்னமாகியே ஒவ்வொரு முறையும் வெளியே வர முடிகிறது. ஆனால் ஒரேடியாக வெளியேற முடிவதில்லை.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை, வாழ வைப்பதற்கான நன்றிக்கடனை சாமானியர்களிடமிருந்து எதிர்பார்க்கிறதோ இல்லையோ, சமயத்தில் இதுப் போன்ற வியாபாரிகளாலும் பண முதலாளிகளாலும் சென்னையின் பேரில், அது சாமானியர்களிடமிருந்து உறிஞ்சப்படுகிறது.
கார்த்திக் பிரகாசம்...
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கட்டணமே 50% க்கு அதிகமாக உள்ள நிலையில், "ரெட் பஸ்" போன்ற முன்பதிவு செய்யும் இணைய தளங்களில் கட்டணம் 100%ஐத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தீபாவளி நாள் நெருங்க நெருங்க இந்தக் கட்டணம் மேலும் உயர வாய்ப்பு அதிகமுள்ளது.
ஒருவேளை எங்கேயாவது மறைமுகமாகவோ அல்லது ஒரு சிலரோ தவறு செய்தால் அதைக் கண்டிக்க புகார் அளிக்கலாம். எல்லாருக்கும் தெரிந்தே பகிரங்கமாக இப்படியொரு பகல் கொள்ளை நடக்கும் போது யாரிடம் புகார் செய்ய முடியும். ஏனென்றால் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிந்தே இது நடக்கிறது
பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போயிட்டு வர மட்டும் 1500 முதல் 2000 செலவாகும் என்ற நிலையில், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த 8000, 10000 என சம்பாதிக்கும் சாமானியனியர்களின் பரிதாப நிலையினைக் கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும்.
புனலைப் போன்ற சென்னையில், அதன் அகன்ற பகுதியில் தனது வாழ்க்கையை லட்சக்கணக்கானோர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுப் போன்ற பண்டிகை அல்லது முக்கியமான நாட்களில், அதேப் புனல் மையப்பகுதிக்கு கீழ் குறுகும் போது அதற்குள் திணிக்கப்பட்டு நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
அந்த நெருக்கடியில் சிக்கி சின்னாபின்னமாகியே ஒவ்வொரு முறையும் வெளியே வர முடிகிறது. ஆனால் ஒரேடியாக வெளியேற முடிவதில்லை.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை, வாழ வைப்பதற்கான நன்றிக்கடனை சாமானியர்களிடமிருந்து எதிர்பார்க்கிறதோ இல்லையோ, சமயத்தில் இதுப் போன்ற வியாபாரிகளாலும் பண முதலாளிகளாலும் சென்னையின் பேரில், அது சாமானியர்களிடமிருந்து உறிஞ்சப்படுகிறது.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment