நேற்று மூன்று கல்லூரி மாணவிகள் பலியான அந்த இடத்தில் அப்படியொரு விபத்து நடந்ததற்கான தடயங்கள் கூட இன்று இல்லை. சிந்திக் கிடந்த மாணவிகளின் ரத்தம், மாநகரத்தின் விறுவிறுப்பில் மிக விரைவாய் உறைந்து போய்விட்டது. சிதறிக் கிடந்த புத்தங்கங்களும் திண்பண்டங்களும் மக்கிய குப்பைகளாகி விட்டன. இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதை அறிந்திருந்தும் எதுவுமே நடக்காதது போல அந்த இடத்தை மிக எளிதாக வாகனங்கள் கடந்து செல்கின்றன.
பரபரப்பான வாழ்க்கையில் தனக்கு நேராத வரை கவனக் குறைவால் ஏற்படும் இதுப் போன்ற விபத்துகளைப் பற்றியும், வாழவே ஆரம்பிக்காமல் இறந்து போன உயிர்களை பற்றியும் நினைத்து பார்க்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. இறப்பதற்கு இன்னும் உயிர்கள் நிறைய இருப்பதனால் இறந்து போன உயிர்களைப் பற்றி கவலைப்படவும் யாரும் தயாராயில்லை.
வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததனால் இத்தகைய விபத்து நேர்ந்தது. கல்லூரிக்கு அருகில் பேருந்து நிறுத்தம் இல்லாததால் தான் விபத்து நேரிட்டது என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.
2500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் கல்லூரிக்கு சரியான இடத்தில் அனைத்து வகை பேருந்துகளும் நின்று செல்லும் வகையில் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தவில்லை எனும் போது கல்லூரி நிர்வாகம் அரசுக்கு இன்னும் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். பேருந்து நிறுத்தம் அறிவிக்கும் வரை அந்த நிர்வாகம் மாணவிகளின் நலனுக்காகத் தொடர்ந்து போராடியிருக்க வேண்டும்
அதே போல், சாலை என்பது வாகனம் செல்வதற்கு மட்டும் என்றாகி விட்டது. வாகனம் செல்வதற்குத் தான் சாலை என்றால் பின்பு நடந்து செல்பவர்களின் கதி. ஒருபுறம் சாலைகளின் மீது கட்டடங்களின் ஆக்கிரமிப்பு. மறுபுறம் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நடைமேடைகள் புறக்கணிப்பு. முக்கியமான சாலைகளில், நடந்து செல்பவர்களுக்கென்று போதிய அளவு இடம் ஒதுக்காதப் போது சாலை பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விடும்.
சாலையில் நடப்பதற்கென்று தனியாக நடைமேடையோ அல்லது மாற்று பாதையோ அமைக்காதவரை இதுப் போன்ற விபத்துக்களைத் தவிர்க்க முடியாது.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment