Skip to main content

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்

இன்றைய தலைமுறையினாரால் அதிகம் அறியப்படாத ஒரு பெயர் . அதுவும் ஒரு முதல்வரின் பெயர். சுதந்திர இந்தியாவில் தமிழகத்திற்கான முதல் முதல்வர்.

ஆம். நம் தமிழ்நாட்டின் தலைச் சிறந்த முதல்வராக கருதப்படும், இன்னும் கொண்டாடப்படும் காமராஜருக்கு முன்பே தமிழகம் கண்டெடுத்த நேர்மையின் சிகரம்.

காந்தியக் கொள்கைகளில் அதிகம் ஈர்ப்புக் கொண்ட ஓமத்தூரார், இரண்டு வருடங்கள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். ஆனால் அந்த இரண்டு வருடங்களில் அவர் செய்த சாதனைகள் மற்றும் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு தான் இன்றுவரை தமிழகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

காந்தியின் மீது கொண்ட பற்றினால் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டவர். இடையில் தனிக் கட்சி அமைக்க சூழ்நிலை அமைந்தும், மற்ற கட்சிகளில் இணைய பல அழைப்புகள் வந்தும் தான் சார்ந்த கட்சிக்கு எத்தகைய துரோகமும் செய்ய கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று கடைசிவரை காங்கிரஸ்லேயே இருந்தவர். ஆட்சிக் கட்டிலையும்,அதிகாரப் பசியையும் அறவே புறம் தள்ளியவர். நேர்மையையும் எளிமையையும் கண் மூடும் காலம் உயிர் மூச்சாக கொண்டவர்.

நிஸாம் கட்டுப்பாட்டில் தனிக் குட்டி நாடாகத் திகழ்ந்த ஹைதராபாத்தையும், பிரென்ச் கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரியையும் இந்தியாவுடன் இணைக்க துணிச்சலுடன் அரும்பாடுபட்டவர்.

ஆதி திராவிடர்களுக்கு, "ஆதி திராவிடர் நலத்துறை" எனத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர் ஓமந்தூராரே. தமிழர்களின் கட்டடக் கலையைப் பறைசாற்றும் விதமாக, தமிழக அரசாங்கத்தின் சின்னமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தைத் தேர்வு செய்ததும் இவரே.

தமிழகம் கண்டெடுத்த மிகச் சொற்பமான தலைச்சிறந்த அரசியல் தலைவர்களில் முதலமானவர் ஓமந்தூர் பி.ராமசாமி..

கார்த்திக் பிரகாசம்...


Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...