நீண்ட நாட்கள் கழித்து அப்பாவுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கிறேன். நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில், டிராவிட் கங்குலி கும்ப்ளே என வீரர்களின் பெயர்களை எனக்கு அறிமுகப்படுத்தி அறிய செய்தார். இன்று டோணி கோலி என ஓரிரு வீரர்களைத் தவிர யாரையும் அவருக்குத் தெரியவில்லை. அதனால் பம்ரா உமேஷ் யாதவ் ரகானே என வீரர்களின் பெயர்களை அறிய செய்து கொண்டிருக்கிறேன். அவர் அமைதியாய் தலையசைத்து கொண்டிருக்கிறார்.
காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றுச் சென்றுக் கொண்டிருக்க நான் மட்டும் அதே இடத்தில் நின்றுக் கொண்டிருப்பதாய் உணர்கிறேன்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment