சுஜாதாவின் பிரம்மாண்டங்களில் மற்றுமொன்று "நில்லுங்கள் ராஜாவே". முதல் பக்கத்தில் இருந்தே தொடங்கிவிடும் பரபரப்பு, கடைசிப் பக்கம் முடியும் வரையிலும் துளிக்கூட குறைவில்லாமல் கதைக்குள் உள்ளிழுத்துச் சென்று உலாவ விடுகிறது. ஒரு நினைவுகளை அகற்றி அவனின் ஆழ்மனதை வசப்படுத்தி, அவனுக்குள் வேறொரு மனிதனின் நினைவுகளை புகுத்தி, அதனை அவனின் ஆழ்மனதுக்குள் நன்கு பதிய வைத்து, "நான் இவன் தான்" என்று தன்னைப் பற்றிய நினைவுகளே இல்லாமல், நினைவுகள் புகுத்தப்பட்ட அந்த மனிதனாகவே மாறிவிடும் ஒரு சாமானிய மனிதனின் கதை. நினைத்துப் பார்க்கும் போதே தலைச்சுற்ற வைக்கிற கதையமைப்பு. முதல் பாதியில் நினைவுகள் புகுத்தப்பட்ட அந்த மனிதனைச் சுற்றியே வலம் வரும் கதை, இரண்டாம் பாதியில் அதிர்ச்சியளிக்கும் விதமாக " ' ஆழ்மனதை கட்டுப்படுத்தும் மருத்துவம்' ' புதிதாகக் குடியாட்சி பெற்ற சிலியானா என்ற கம்யூனிச நாடு' மற்றும் 'அமெரிக்காவின் சி.ஐ.ஏ ' " என்று பரந்து விரிகிறது. ஏற்கனவே இருக்கும் " ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், ரத்தம் ஒரே நிறம், பிரிவோம் சந்திப்போம் " என்று நீளும் சுஜாதாவ...