மனிதனின் வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து பசியென்ற ஒற்றை உணர்வு மட்டும் இல்லாது போனால் சுழலும் பூமி தன் சுழற்சியை நிறுத்திவிடுமா.? வேண்டாம் குறைந்தபட்சம் தன் வேகத்தையாவது குறைத்துக் கொள்ளுமா.? பசியென்ற உணர்வு ஒருவேளை வயிற்றுக்கு மட்டும் இருந்திருந்தால் ஆரம்பித்த இடத்திலேயே உலகம் தொடர்ந்து சுழன்றுக் கொண்டிருந்திருக்குமா.?
உயிர் வாழ அடிப்படையான வயிற்றுப் பசிக்காக ஓடத் தொடங்கிய முதல் மனிதனின் வாழ்க்கை இன்று ஒவ்வொரு புலனின் பசிக்காகவும் பல்கிப் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது. வயிற்றில் தொடங்கும் பசி உடலெங்கும் ஊடுருவி "உடல் பசி, பொருளாதார பசி, அந்தஸ்து பசி, ஆடம்பர பசி, கௌரவ பசி, காமப் பசி, அதிகார பசி" என்று இன்னும் ஏதேதோ ரூபத்தில் மனிதனைத் துரத்திக் கொண்டிருக்கிறது. ஒரு புலனின் பசி தீர்ந்தால் இன்னொன்று. அதுவும் அடைந்துவிட்டால் மற்றொன்று. இதில் எந்தப் பசியும் இல்லாவிட்டால் புதிதாக ஒரு பசி.
அனைத்துப் பசியையும் தனதாக்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக உலகம் ஓடுகின்றது. இந்த ஓட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாய் உள்ளது. ஆனால் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். யாரோ என்னைத் துரத்துகிறார்கள் இல்லை இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள் இல்லை ஓட்டத்திலிருந்து தள்ளிவிடுகிறார்கள். நான் இடறி விழுகிறேன். யாரும் என்னைத் தூக்கிவிட வில்லை. நானும் ஓட எழவில்லை. ஆனாலும் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்.
"நான் எதற்காகவும், எந்தப் பசிக்காகவும் ஓடவில்லை என்று என்னை நம்பவைக்க முயல்கிறேன். வாழ்க்கையை அதன் போக்கிலேயே சற்று விலகி நின்று வேடிக்கைப் பார்க்க விரும்புகிறேன். என் வாழ்க்கையில் நானே ஒரு பார்வையாளனாய் பங்கேற்க யத்தனிக்கிறேன்." இவ்வாறெல்லாம் ஓட்டத்தை நிறுத்துவதைப் பற்றி எண்ணியபடியே தினமும் ஓடுகிறேன்.
ஆனால் இந்த ஓட்டத்திலிருந்து விலகி ஒதுங்கவும் முடியவில்லை விரும்பி ஓடவும் முடியவில்லை.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment