கிளம்புவதற்கு முன் படுக்கையில் வெகுநேரம் கட்டியணைத்துப் புரண்டார்கள். இவ்வுலகில் இவர்கள் மட்டும் தனித்து விடப்பட்டதைப் போல் முத்தமிட்டார்கள். காந்தத்தைப் போல ஒட்டிக் கொண்டார்கள். ஆடை துறந்து தேகம் மறந்து ஒருவர் உடலுக்குள் இன்னொருவர் மாறி மாறி ஊடுருவினர். மஞ்சத்தை வியர்வைத் துளிகளால் நனைத்தனர்.
சிக்னலில் வண்டியை நிறுத்தி கண்ணாடியில் அவளைக் கவனித்தான். பின் இருக்கையில் சிறிதுத் தள்ளி அமர்ந்திருந்தாள். எப்பொழுதும் இப்படித் தள்ளி உட்காருபவள் அல்ல அவள். இருச்சக்கர வாகனத்தில் செல்லும் போதெல்லாம், அவளுடைய மார்பு அவனின் முதுகில் உரசி தன் தடத்தைப் பதிக்காமல் இருந்ததாய் நினைவில் இல்லை. இப்பொழுது அவனுடைய முதுகிற்கும் அவளுடைய மார்பிற்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளி அவனை வெகுவாய் பாதித்தது.
"ஏன் தள்ளி அமர்ந்திருக்கிறாய்.?" அவளிடமே கேட்டான்.
"நமக்குள் இவ்வளவு நடந்த பிறகும், இந்தச் சிறிய பயணத்திலும்கூட நான் உன்னைக் கட்டியணைத்து அமரவில்லை என்பது உனக்கு உருத்துகிறதா.?" அவள் கலங்கினாள்.
"அடியே.! என் இராட்சசக் காதலியே.! இறுகக் கட்டிக்கொள்.! நாம் பயணிக்க வேண்டிய தூரம் முடிவில்லாமல் கண்முன்னே நீண்டுக் கிடக்கிறது."
அவள் முழு மனநிறைவுடன் அவனைக் கட்டிக் கொண்டாள்.
பச்சை சிக்னல் விழுந்தது.
கார்த்திக் பிரகாசம்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment