"காலைலேயே உங்கிட்ட சொன்னேன். ரொம்ப லேட் பண்ணாம சாயந்தரம் சுருக்க கெளம்பிடு. எட்டு மணிக்கு மேல ஆச்சுன்னா டாக்டர் கிளீனிக்'ல இருந்து போய்டுவாங்கனு. பாரு இப்பவே மணி ஏழரை ஆயிடுச்சு. திருச்சில என்ன கொஞ்சநஞ்ச கூட்டமா இருக்கு. மொத்த ஜனமும் ரோட்டுல தான் இருக்கும் போல. எப்போ போனாலும் அவ்வளவு டிராபிக். இதுல எங்க எட்டு மணிக்குள்ள போறது" சூடான எண்ணெய்யில் கொட்டிய கடுகைப் போல மித்ரன் பொரிந்துத் தள்ளினான்.
"சரி..! சரி..! சும்மா கத்தாதீங்க.. உங்க பையன் கைய கால வச்சிக்கிட்டு சும்மா இருந்தாதானே. எந்நேரமும் வயித்துல எட்டி எட்டி உதைச்சிகிட்டே இருந்தா.. நான் என்னதான் பண்றதாம்மா.?" என்று அவனின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினாள் ராகவி.
அவள் கைபட்டதும், முதல் வெண்பனியில் குளித்த துளசியைப் போல அவனின் உடல் குளிர்ந்தது. கன்னங்கள் சிவந்தது. கோபமெல்லாம் கும்பகோணம் தாண்டி எங்கோ போனது.
"அதெப்படி கண்ணு, நான் எவளோ கோவத்துல இருந்தாலும் ஒரே சீண்டல்ல மொத்தத்தையும் கம்மங்கூழ் மாதிரி கரைச்சிப்புட்ற" மித்ரன் குழைந்தான்.
"அவள் பதிலேதும் சொல்லாமல் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்"
"மூச்சு விடுவதைக் கூட மறந்து மூர்ச்சையானான்" அவன்.
"நான்கு கண்களும் இமைப்பதை மறந்தன".
அவள் உதடுகளைக் குவித்து நெருங்கி வந்தாள். அவன் மயக்கத்தில் கண்களை மெள்ள மூடினான். இல்லை அதுவே மூடிக் கொண்டது. அவளின் மூச்சு அவனின் கன்னத்தில் பட்டு அவளுக்கே சுவாசிப்பதற்காய் திரும்பி வந்தது. இடைவெளி குறைந்து குறைந்து இறுதியில் இல்லாமல் போனது. அவன் காதினருகில் நெருங்கி, "இப்போ நேரம் ஆகலையா..! சீக்கிரம் வண்டிய எடுங்க.!" என்றாள்.
திடுக்கிட்டு கண்களை திறந்தான். அவனுடைய குவிந்த உதடுகள் ஏமார்ந்தன.
"ஏய்..! வாலு" என்று அவளை செல்லமாய் அடிக்க எழுந்தான். அவள் புறா போல தத்தி தத்தி ஓடினாள்.
ஹே ஹே...! ஓடாத..! வயித்துல புள்ளைய வச்சிக்கிட்டு ஏன் இப்படி ஓடற..! அவள் நின்றாள்.
வண்டில ஏறு..! கிளினிக் போலாம்.
மித்ரன் சொன்னது போல ரோட்டில் இன்று அந்த அளவுக்குக் கூட்டமில்லை. சொல்லப் போனால் வெறிச்சோடிக் கிடந்தது. வெறிச்சோடியிருந்ததைப் பார்த்து அவனின் காதுகளில் நக்கலாக கிசுகிசுத்துக் கொண்டிருந்தாள்.எங்கிருந்தோ வந்த போக்குவரத்துக் காவலர் திடீரென்று சாலையில் தோன்றி வண்டியை நிறுத்தினார்.மித்ரனிடம் அனைத்து சான்றிதழ்களும் சரியாக இருந்ததனால் தைரியமாக வண்டியை ஓரம்கட்ட முயன்றான். அவன் தப்பிக்க முயல்கிறான் என தவறாக நினைத்தக் காவலர் பாய்ந்து பிடித்து வண்டியை இழுத்தார். பதற்றத்தில் மித்ரன் நிலை தடுமாறினான். வண்டி கட்டுப்பாட்டை இழந்தது. அவன் இடப் பக்கமாக விழ, ராகவி முன்புறமாக வயிறு தரையில் மோத விழுந்தாள்.
கைகளில் சிராய்ப்புடன் மித்ரன் சுதாரித்து எழுவதற்குள், இரத்த வெள்ளத்தில் ராகவி மயங்கிக் கிடந்தாள். சேலையும் சாலையும் ரத்தத்தில் நனைந்து நிறம் மாறியிருந்தது. காவலரையும் ராகவியையும் பொதுமக்கள் சூழ்ந்தனர். அனைவரையும் விலக்கிவிட்டு அவளை மடியில் ஏந்தினான் மித்ரன். உதடுகள் குவிந்த நிலையில் சலனமே இல்லாமல் கிடந்தது முகம். வீறிட்டுக் கதறி அழுதான் மித்ரன்.
ராகவி அவன் மார்பின் மீது கைகளைப் போட்டாள். இயல்பை மீறித் துடித்த இதயத் துடிப்பில் திடுக்கென்று விழித்தான் மித்ரன். முகம் முழுவதும் வியர்வைக் கோலமிட்டிருந்தது. சலனமே இல்லாமல் குவிந்த உதடுகளுடன் குழந்தைப் போல உறங்கிக் கொண்டிருந்தாள் ராகவி. லேசாய் மேடிட்டிருந்த அவளது வயிற்றைத் தடவி, தலையைக் கோதி நெற்றியில் நிம்மதியுடன் முத்தமிட்டான்.
எல்லாம் கனவு...!!!
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment