கண் திறக்கும் முன்னே
இமை மூடிக் கொண்டாயே...!
சுயமாய் சுவாசிக்கும் முன்னே
சுகத்தை இழந்தாயே...!
மண்ணை மிதிக்கும் முன்னே
மாண்டு போனாயே...!
புறவுலகைக் காணும் முன்னே
புதைக்கப்பட்டாயே...!
பிறவியெடுக்கும் முன்னே
பிணமானாயே...!
உன்
பிஞ்சு பாதங்களை
நெற்றியில் ஒற்றிக் கொள்ளும்
பாக்கியத்தை எனக்கு தராமல்
ஏன் போனாயோ...!
நூறு வருடங்கள் வாழ
ஆசையில்லையா
உனக்கு...?
நூறு நாட்கள் மட்டும்
கருவறையில் தங்கி விட்டு
சென்றுவிட்டாயே...?
என்னைத் தண்டித்துவிட்டு
ஏன் சென்றாய்.?
வாங்கி வைத்திருக்கும்
விளையாட்டு பொம்மைகளிடம்
எப்படிச் சொல்லுவேன்
கருவிலேயே நீ
மறைந்துவிட்டாயென்று...?
மார்புக் கூட்டில்
உனக்காக
ஊறியிருக்கும் பாலமுதை
என் செய்வேன் நான்...?
கார்த்திக் பிரகாசம்...
இமை மூடிக் கொண்டாயே...!
சுயமாய் சுவாசிக்கும் முன்னே
சுகத்தை இழந்தாயே...!
மண்ணை மிதிக்கும் முன்னே
மாண்டு போனாயே...!
புறவுலகைக் காணும் முன்னே
புதைக்கப்பட்டாயே...!
பிறவியெடுக்கும் முன்னே
பிணமானாயே...!
உன்
பிஞ்சு பாதங்களை
நெற்றியில் ஒற்றிக் கொள்ளும்
பாக்கியத்தை எனக்கு தராமல்
ஏன் போனாயோ...!
நூறு வருடங்கள் வாழ
ஆசையில்லையா
உனக்கு...?
நூறு நாட்கள் மட்டும்
கருவறையில் தங்கி விட்டு
சென்றுவிட்டாயே...?
என்னைத் தண்டித்துவிட்டு
ஏன் சென்றாய்.?
வாங்கி வைத்திருக்கும்
விளையாட்டு பொம்மைகளிடம்
எப்படிச் சொல்லுவேன்
கருவிலேயே நீ
மறைந்துவிட்டாயென்று...?
மார்புக் கூட்டில்
உனக்காக
ஊறியிருக்கும் பாலமுதை
என் செய்வேன் நான்...?
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment