கடந்த கால புகைப்படங்களைப் பார்க்கையில், வாழ்க்கை வலுக்கட்டாயமாக எங்கோ என்னை கடத்தி வந்துள்ளதைப் போன்றதோர் மாய உணர்வு உள்ளத்தில் உண்டாகும். உடனே தாடியைத் தடவியவாறு அந்தரத்தை வெறித்துப் பார்ப்பேன். இப்போதைக்கு தேவையில்லை என்று அலமாரியில் அடைக்கப்பட்ட பாத்திரங்களில் ஒட்டி விரிந்திருக்கும் ஒட்டடை, காற்றின் சுழற்சிக்கு ஏற்ப அறுந்துவிடாமல் ஆடுவது போல் அந்த பழைய நினைவுகள் மனதிற்குள் நிர்வாணமாய் ஓடும். மறுபடியும் தூக்கிக் கொண்டு போய் இறந்த காலத்தில் இறக்கிவிடும். இது ஓரிரு முறையல்ல ஒவ்வொரு முறையும் நிகழும்.
நிறைய புத்தகங்கள் படிப்பவள். இலக்கியக் காதலி. வரலாற்றின் மீது அலாதி ஆர்வம். தேடித் தேடி புத்தகங்களை வாசிப்பாள் இல்லை தண்ணீர் போல் பருகுவாள். எல்லாவிதமான விஷயங்களுக்கும் தனக்கென்ற தீர்க்கமான பார்வையைக் கொண்டிருப்பாள். அடுத்த நொடியே விவாதிக்க அழைத்தாலும் வரலாற்றுத் தகவல்களைக் கன கச்சிதமாகக் குறிப்பிட்டு வாதாடுவாள்.
"இன்றும் நிகந்தது"
கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் போது நானும் அவளும் எடுத்துக் கொண்ட புகைப்படம். எடுத்தாக வேண்டும் என்றுத் திட்டமிட்ட முன் தயாரிப்புடன், "நேராக நின்று, பல் தெரியாமல் சிரித்து, இடது கையை அவளின் தோள் மீது போட்டு, இடது கையின் முடிவில் அவள் தன் வலதுகையை பிணைத்து என் தோளில் தலைச் சாய்த்தெல்லாம்" எடுக்கவில்லை. நான்காமாண்டு மாணவர்களுக்கானப் பிரியாவிடை நிகழ்ச்சி ஏற்பாட்டின் போது நானும் அவளும் ஆளுக்கொரு வேலையாய் சுற்றிக் கொண்டிருக்கும் போது நண்பன் ஒருவன் யதேச்சையாகச் கிளிக்கியது. அதில் நானும் அவளும் மோதிக் கொள்வது போல் இருக்கும். ஆனால் நாங்கள் மோதிக் கொள்ளவில்லை. கனநேரத்தில் இருவரும் சுதாரித்துக் கொண்டு விலகிவிட்டோம்.
அழகிகள் எல்லாம் பிடிவாதக்காரிகளாக இருப்பார்களாம். அவள் பிடிவாதக்காரி அல்ல. அதற்காக அழகியில்லை என்று சொல்லிவிட முடியாது.
நீள்வட்ட முகம். அடர்த்தியான புருவங்கள்(அச்சமயத்தில் என் மீசையைக் காட்டிலும் அவளின் புருவங்கள் அடர்த்தியாக இருந்தது). வெள்ளிக்கிழமை மட்டும் வலது பக்கவாட்டில் வகிடு மற்ற நாட்களில் நேர் வகிடெடுத்து கூந்தலைக் கட்டியாண்டிருப்பாள்.மேகத்தை வெட்டி கிழிக்கும் மின்னல் போல நெற்றியின் மத்தியில் நேர்க்கோட்டு குங்குமம் இருக்கும் . அதன் மேல் அரக்கு நிற வட்ட வடிவ பொட்டு(கல்லூரியின் முதல் இருவருடங்கள் அது கோபுர வடிவில் இருந்தது. கோபுரத்திலிருந்து வட்ட வடிவிற்கு மாறியதன் காரணம் தெரியவில்லை). செவி மடல்களைச் சங்கடப்படுத்தாமல் குடையைக் கவிழ்த்துத் தொங்கவிட்டதைப் போன்ற கம்மல். அதிரங்களுக்கு சாயமிட்டு பார்த்ததாக நினைவில் இல்லை. அவள் அரிதாரம் பூசிக் கொண்டதாக இல்லை, தன்னை அங்கீகரித்து கொள்ள அரிதாரம் அவளை அப்பிக் கொண்டதாய் இருக்கும். துண்டுச் சதை அதிகமாக இருக்காது. கச்சிதமான உடலமைப்பு.
அழகிகள் எல்லாம் பிடிவாதக்காரிகளாக இருப்பார்களாம். அவள் பிடிவாதக்காரி அல்ல. அதற்காக அழகியில்லை என்று சொல்லிவிட முடியாது.
நீள்வட்ட முகம். அடர்த்தியான புருவங்கள்(அச்சமயத்தில் என் மீசையைக் காட்டிலும் அவளின் புருவங்கள் அடர்த்தியாக இருந்தது). வெள்ளிக்கிழமை மட்டும் வலது பக்கவாட்டில் வகிடு மற்ற நாட்களில் நேர் வகிடெடுத்து கூந்தலைக் கட்டியாண்டிருப்பாள்.மேகத்தை வெட்டி கிழிக்கும் மின்னல் போல நெற்றியின் மத்தியில் நேர்க்கோட்டு குங்குமம் இருக்கும் . அதன் மேல் அரக்கு நிற வட்ட வடிவ பொட்டு(கல்லூரியின் முதல் இருவருடங்கள் அது கோபுர வடிவில் இருந்தது. கோபுரத்திலிருந்து வட்ட வடிவிற்கு மாறியதன் காரணம் தெரியவில்லை). செவி மடல்களைச் சங்கடப்படுத்தாமல் குடையைக் கவிழ்த்துத் தொங்கவிட்டதைப் போன்ற கம்மல். அதிரங்களுக்கு சாயமிட்டு பார்த்ததாக நினைவில் இல்லை. அவள் அரிதாரம் பூசிக் கொண்டதாக இல்லை, தன்னை அங்கீகரித்து கொள்ள அரிதாரம் அவளை அப்பிக் கொண்டதாய் இருக்கும். துண்டுச் சதை அதிகமாக இருக்காது. கச்சிதமான உடலமைப்பு.
நிறைய புத்தகங்கள் படிப்பவள். இலக்கியக் காதலி. வரலாற்றின் மீது அலாதி ஆர்வம். தேடித் தேடி புத்தகங்களை வாசிப்பாள் இல்லை தண்ணீர் போல் பருகுவாள். எல்லாவிதமான விஷயங்களுக்கும் தனக்கென்ற தீர்க்கமான பார்வையைக் கொண்டிருப்பாள். அடுத்த நொடியே விவாதிக்க அழைத்தாலும் வரலாற்றுத் தகவல்களைக் கன கச்சிதமாகக் குறிப்பிட்டு வாதாடுவாள்.
அவளிடம் அழகிருந்தது. அறிவுமிருந்தது. ஆனால் இவ்விரண்டின்பால் ஊறும் ஆணவம் துளியும் இருந்ததில்லை.
ஒரு பேச்சுப் போட்டி மேடையில், சகப் பேச்சாளன் அவளைப் பார்த்து "உன் ஞானத்தில் உதித்த தீர்க்கமானக் கருத்துக்களென்று உனக்கொன்றும் இல்லை. உன்னிடம் குவிந்திருப்பதெல்லாம் கடன்வாங்கப்பட்டவை. நீ படித்த புத்தகங்களில் இருந்தும், படித்த தலைவர்களிடம் இருந்தும் கடன்வாங்கப்பட்ட கருத்துக்கள்" என்றுச் சொல்லிவிட்டான். மேடையே ஒரு நிமிடம் மௌனத்தில் திக்குமுக்காடியது.

அவள் இந்தத் தாக்குதலை எப்படிச் சமாளிக்கப் போகிறாளென்று மொத்த அரங்கமும் எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஒட்டுமொத்த அரங்கமும் அவளின் உதட்டசைவையே உன்னித்துக் கவனித்துக் கொண்டிருந்தது. பதற்றப்படாமல் மைக்குடன் எழுந்தாள். நிதானமாக ஒரு புன்னகையை உதிர்த்தாள்.
"ஆம். என் கருத்துக்கள் கடன் வாங்கப்பட்டவை தான்".
'சிறிது இடைவெளி'.
'மொத்த அரங்கமும் மௌனத்தில்'.... பிறகு தொடர்ந்தாள்.!
"கடலிடம் மேகம் கடன் வாங்குகிறது. மேகத்திடம் மண் கடன் வாங்குகிறது. மண்ணிடம் இயற்கைக் கடன் வாங்குகிறது. இயற்கையிடம் மனிதன் கடன் வாங்குகிறான். நான் வரலாற்றிடனிடமிருந்தும் இலக்கியத்தினிடருந்தும் கடன் வாங்குகிறேன். ஆனால் அவற்றில் எது என் அறிவெல்லைக்குச் சரியென்றுபடுகிறதோ அவற்றை மட்டுமே கருத்து பெட்டகத்திற்குள் சேர்த்துக் கொள்கிறேன்"
"மீண்டும் சிறிது இடைவெளி"
'முழுவதும் கரவொலி. அரங்கமே அதிர்ந்தது.'
சமநிலைக்கு வர சில நிமிடங்கள் ஆயின.
அசத்தி விட்டாள்... அடித்துத் தும்சம் செய்துவிட்டாள்... அவளை அரங்கத்தின் ஓரத்தில் நின்றவாறு வாயைப் பிளந்து பார்த்திருந்தேன். உடல் மட்டும்தான் அங்கு ஓரமாக நின்றுக் கொண்டிருந்தது. சிந்தனையெல்லாம் மேடையில் அவளைப் பாராட்ட வார்த்தைக் கிடைக்காமல் திக்கித் திணறியது.

அன்று அவளின் மீது உண்டான ஈர்ப்பும் வியப்பும் அடிமனதின் ஆழத்தில் அப்படியே உறைந்துபோய் தங்கிவிட்டது.
ஆனால் எனக்கே விளங்காத ஒன்று என்னவென்றால் அந்த ஈர்ப்பும் வியப்பும் ஏனோ என்னை அவளை நோக்கிச் செலுத்தவில்லை. அவளைத் தூரத்திருந்தே தான் ரசிக்கச் சொல்லியது அல்லது அவ்வாறு தான் நான் உணர்ந்தேன். தினமும் மனதிற்குள் அவளுக்கு "காலை வணக்கம்" சொன்னேன். அவள் தோழிகளோடு அரட்டையடித்துச் சிரிக்கும் போது நானும் சிரித்தேன். கேலியாக உதட்டைக் கடித்துக் கொள்வதை எண்ணினேன். அவ்வப்போது அவள் ஜீன்ஸ் அணிந்து வருவதை ரசித்தேன். அவள் அணியும் ஆடைகளின் நிறத்தை நானும் எனக்கு அப்பினேன். அவள் கவிதைகளுக்கு என் இதயத் துடிப்பில் பாராட்டினேன். கொலுசொலியைக் கூர்ந்து கவனித்தேன். அவளின் ஒற்றைச் சடை, இரட்டை சடை, தண்ணீர்ச் சடை என அனைத்தையும் நெஞ்சில் பதித்தேன்.
'இருப்பினும் அவளிடம் நான் பேசியதேயில்லை'
அவளுக்கு என் பெயர்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தெரிந்திருந்தாலும் அவள் பெயர் சொல்லி என்னை ஒருபோதும் அழைத்ததில்லை.

ஆனால் இன்றும் அவளை, அவள் எழுத்தை, அவள் கவிதைகளைப் பின் தொடர்கிறேன். அவளின் பெரும்பாலான கருத்துகளோடு ஒத்துப் போகிறேன்.
அவளின் பெயரா..?
நினைவுகளை உருசித்து பார்க்கப் பெயரொன்றும் அவசியமில்லையே...!!!

கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment