அதிலொன்றும் ஆச்சரியமில்லை. உலகம் புரிந்திடாத, உறவுமுறைகளின் புதிர்கள் தெரிந்திடாத பருவத்திலேயே அழகானத் தோழமையுடன், ஆழமான அன்புணர்வுடன் ஒரு சிநேகிதி கிடைக்கப் பெற்றிருந்தால் இச்சமயம் நீங்களும் ஒரு கவிஞனாக இருந்திருப்பீர்கள். கலையை ரசிப்பவனாக இருந்திருப்பீர்கள். அது உண்டாக்கும் ஒவ்வொரு உணர்ச்சியையும் ஆழ்ந்து நேசிப்பவனாக இருந்திருப்பீர்கள். அதனை உடலெங்கும் பரவவிட்டு, ஒவ்வொரு நொடியிலும் இருத்தலின் சுகத்தை அனுபவித்திருப்பீர்கள். இருத்தலின் சுகத்தில் இல்லாமல் போகும் வழியையும் கண்டடைந்திருப்பீர்கள். அது சொர்க்கத்திற்குச் செல்லும் வழியல்ல. நம் சொர்க்கத்தை நாமே கட்டமைத்துக் கொள்ளும் வழியென்று அறிந்திருப்பீர்கள்.
எனக்கும் அவளுக்கும் இடையில் இருக்கும் புரிதல் மற்றவர்களுக்கு புரியாது. வேறாரும் அவ்விடைவெளிக்குள் புகுந்திடவும் முடியாது. அது எங்கள் இருவருக்கு மட்டுமே சொந்தமான நிரந்தர புகலிடம்.
உடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கிணற்றில் நீர் இறைப்பது போல நெஞ்சில் உணர்வுகளைத் தொடர்ந்து இறைத்துக் கொண்டேயிருப்பாள். எழுத முயற்சித்தால் காகிதத்தில் அவளது முகமே தெரியும். கொட்டித் தணியும் உணர்வுகளுக்கும், திக்கித் திணரும் வார்த்தைக்களுக்குமான இடைவெளியில் அவளே நிறைந்திருப்பாள். வார்த்தைகளின் தொலைவை அவளே நிர்ணயிப்பாள். பின்னே அவளே அதை நிரப்பவும் செய்வாள்.
அவ்வொற்றை தோழமை உயிருக்குள் ஓராயிரம் உருவங்கள் உறைந்திருக்கும். நட்பை மீட்டினால் தோழியின் உருவம் கொடுப்பாள். காதலைத் தீட்டினால் காதலியின் உருவம் அடைவாள்.குழந்தையைக் காட்டினால் தாயின் உருவாய் வருவாள். தாம்பத்தியத்தைக் கொட்டினால் மனைவியின் உருவமாவாள். தந்தையை வரைந்தால் மகளின் பிம்பமாவாள்.
அனைத்து உணர்வுகளும் அடிநாதமாக அவளது முகத்தையே மனதில் உருவகப்படுத்தும். அவற்றிக்கு பாரபட்சமில்லாமல் உருவமேற்கும் அவள் விந்தைக்காரி தான்.
என் உணர்வுகள் தீராதென்று சொல்லலாம். தீர்ந்திடாமல் அவள் புதுப்பித்துக் கொண்டே இருப்பாள் என்றும் சொல்லலாம். அவளது உருவம் மறையாதென்று சொல்லலாம். எந்தன் உணர்வுகள் அவளை மறக்காதென்றும் சொல்லலாம்.
ஒருவேளை நானொரு சாதாரண ஆணாகப் பிறந்ததும், அவளொரு அசாதாரண பெண்ணாகப் பிறந்திட்டதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment