அது என் உலகம்
நானே கட்டமைத்த உலகம்
அங்கு நான்
கேட்பது கிடைக்கும்
நினைப்பது நடக்கும்
உரைப்பதை ஊரே முழங்கும்
எவராவது அவ்வப்போது புதிதாக வருவார்கள்
சில காலம் இருப்பார்கள்
சிலர் சொல்லிக் கொண்டு போவார்கள்
சிலர் சொல்லாமலே செல்வார்கள்
சென்றவர்களின்
நினைவுகள் எங்கும் செல்லாது
என்னுடனே இருக்கும்
பெரும்பாலும்
நானும் நானாகிய நானும்
மட்டும் தனித்திருப்போம்
அந்நினைவுலகத்தில்
என்றும்
நான் நிரந்தரமானவனாக
இருப்பேன்
அங்கு நான்
கேட்பது கிடைக்கும்
நினைப்பது நடக்கும்
உரைப்பதை ஊரே முழங்கும்
கார்த்திக் பிரகாசம்...
நானே கட்டமைத்த உலகம்
அங்கு நான்
கேட்பது கிடைக்கும்
நினைப்பது நடக்கும்
உரைப்பதை ஊரே முழங்கும்
எவராவது அவ்வப்போது புதிதாக வருவார்கள்
சில காலம் இருப்பார்கள்
சிலர் சொல்லிக் கொண்டு போவார்கள்
சிலர் சொல்லாமலே செல்வார்கள்
சென்றவர்களின்
நினைவுகள் எங்கும் செல்லாது
என்னுடனே இருக்கும்
பெரும்பாலும்
நானும் நானாகிய நானும்
மட்டும் தனித்திருப்போம்
அந்நினைவுலகத்தில்
என்றும்
நான் நிரந்தரமானவனாக
இருப்பேன்
அங்கு நான்
கேட்பது கிடைக்கும்
நினைப்பது நடக்கும்
உரைப்பதை ஊரே முழங்கும்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment