விற்காமல்
தேங்கிக் கிடக்கும்
அந்தக்
கவிதைப் புத்தகங்களில்
ஓராயிரத்தியொரு காதல்களும்
ஒடுக்கிச் சிதைத்த பெருவலிகளும்
ஏங்கிக் கிடந்த ஏக்கங்களும்
தூக்கியெறிந்த பிரிவுகளும்
முதுகுடைத்த துரோகங்களும்
பகீர ஆளில்லா இன்பங்களும்
கலைஞனின் குமுறல்களும்
உணர்வற்று
தூசி அழுக்குகள் உருமாற்றிய
சவ அட்டைகளால் மூடப்பட்டு
முகமிழந்த
நிரந்தர அநாதையாய்க் கிடக்கின்றன
கார்த்திக் பிரகாசம்...
தேங்கிக் கிடக்கும்
அந்தக்
கவிதைப் புத்தகங்களில்
ஓராயிரத்தியொரு காதல்களும்
ஒடுக்கிச் சிதைத்த பெருவலிகளும்
ஏங்கிக் கிடந்த ஏக்கங்களும்
தூக்கியெறிந்த பிரிவுகளும்
முதுகுடைத்த துரோகங்களும்
பகீர ஆளில்லா இன்பங்களும்
கலைஞனின் குமுறல்களும்
உணர்வற்று
தூசி அழுக்குகள் உருமாற்றிய
சவ அட்டைகளால் மூடப்பட்டு
முகமிழந்த
நிரந்தர அநாதையாய்க் கிடக்கின்றன
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment