காமம் கடந்த காதல் தான்
உன்னதமானதென்று
காமத்தைக் காதலிலிருந்து
கரைத்தொதுக்க எண்ணுகிறார்கள்
சிலர்
காதலில்
காமத்தை ஏன்
கடக்க வேண்டும்
கண்ணே...!
இந்து மதத்தில் இருந்து
சாதியை விலக்க
முடியுமா...?
காமத்தைக் கடப்பது
காதலிலிருந்து விலகுவது
என்றுதானே
பொருள்
பிறகேன்
காதலைத்
தெய்வத் தன்மையோடு போற்றும்
அதே நேரத்தில்
காமத்தை
ஒதுக்கி
ஓரம்கட்டி
வைக்க வேண்டும்
உள்ளபடிக்கு சொல்கிறேன்
காமத்தைக் கடக்கும்
காதல் நமக்கு வேண்டாம்
கண்ணே...
வா...!!!
காமத்தோடு கைக்கோர்த்தவாறே
காதலிப்போம்...!!!
கார்த்திக் பிரகாசம்...
உன்னதமானதென்று
காமத்தைக் காதலிலிருந்து
கரைத்தொதுக்க எண்ணுகிறார்கள்
சிலர்
புரியவில்லை
காதலில்
காமத்தை ஏன்
கடக்க வேண்டும்
கண்ணே...!
இந்து மதத்தில் இருந்து
சாதியை விலக்க
முடியுமா...?
காமத்தைக் கடப்பது
காதலிலிருந்து விலகுவது
என்றுதானே
பொருள்
பிறகேன்
காதலைத்
தெய்வத் தன்மையோடு போற்றும்
அதே நேரத்தில்
காமத்தை
ஒதுக்கி
ஓரம்கட்டி
வைக்க வேண்டும்
உள்ளபடிக்கு சொல்கிறேன்
காமத்தைக் கடக்கும்
காதல் நமக்கு வேண்டாம்
கண்ணே...
வா...!!!
காமத்தோடு கைக்கோர்த்தவாறே
காதலிப்போம்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment