Skip to main content

ஏதுமற்ற ஏதோவொன்று

நீ
பேசுகிறாய்
உன் வார்த்தைகள்
வறண்டே ஒலிக்கின்றன
நீ
பார்க்கிறாய்
உன் பார்வையில்
பாசாங்கே பரவுகிறது
நீ
சிரிக்கிறாய்
உன் சிரிப்பில்
லயிக்கும் ஈரமே இல்லை
நீ
அருகில் இருக்கிறாய்
உன் மனமோ
எங்கோ தொலைவிலே திரண்டிக்கிறது
மொத்தத்தில்
இங்கே நீயில்லை
அங்கே நானில்லை

கார்த்திக் பிரகாசம்...

Comments