Skip to main content
புதிதாய் அடையுமொன்றில்
எப்போதோ இழந்ததை
இனி
ஒருபோதும் அடைய
முடியாதொன்றை
பாலையில்
அவிழ்த்துவிட்ட
மேய்ச்சல் மாடு கணக்காய்
தேடித் திரியும் மனத்தில்
கடும் பாறையாய்
உறைந்து கிடக்கும்
பருவத்தின் ஓர் பகுதி
உடைவதில்லை அது
உருகுவதுமில்லை

கார்த்திக் பிரகாசம்...

Comments