உன்னில்
எனக்கே எனக்கென்று
ஓர் இடம் வைத்திருந்தாய்?
அது காதலுக்கான இடம் தானென்று
சூளுரைக்கவில்லை
நான்
ஓர்
வளர்ப்பு நாயிக்கான இடமாகவோ
பூனைக் குட்டிக்கான இடமாகவோ
மலரின் இடமாகவோ
பேனாவின் இடமாகவோ
மது பொத்தலின் இடமாகவோ
சிகரெட் துண்டின் இடமாகவோ கூட
இருந்திருக்கலாம்
அது
ஆனால் அடிக்கடி நீயென்னை அழைக்கும்
"கண்ணு"
காற்று வெளியிடையில்
உதடுகள் தீண்டிடாமல்
நித்தம் நீ
பரப்பிட்ட பேரன்பின்
முத்தமில்லையா?
நம்மிருவரை மட்டும் சுமந்து செல்லும்
இருசக்கர வாகனமல்ல காலம்
நீயின்றி என்னால் வாழ இயலும்
நானின்றியும் உன்னால் முடியும்
மறுப்பதற்கில்லை
இருப்பினும்
என் பிரியத்தின் இடத்தை
பிறிதொன்றால் எளிதாக
நிரப்பிடுவேன் என்றாயே
அன்று தான் முடிவு செய்தேன்
சலனப்படுத்தாத என் அன்பின் இடம்
உன்னுள் சமாதியாவதற்குள்
வெற்று புன்னகையுடன்
விலகிச் செல்வதென்று
கார்த்திக் பிரகாசம்...
ஓர் இடம் வைத்திருந்தாய்?
அது காதலுக்கான இடம் தானென்று
சூளுரைக்கவில்லை
நான்
ஓர்
வளர்ப்பு நாயிக்கான இடமாகவோ
பூனைக் குட்டிக்கான இடமாகவோ
மலரின் இடமாகவோ
பேனாவின் இடமாகவோ
மது பொத்தலின் இடமாகவோ
சிகரெட் துண்டின் இடமாகவோ கூட
இருந்திருக்கலாம்
அது
ஆனால் அடிக்கடி நீயென்னை அழைக்கும்
"கண்ணு"
காற்று வெளியிடையில்
உதடுகள் தீண்டிடாமல்
நித்தம் நீ
பரப்பிட்ட பேரன்பின்
முத்தமில்லையா?
நம்மிருவரை மட்டும் சுமந்து செல்லும்
இருசக்கர வாகனமல்ல காலம்
நீயின்றி என்னால் வாழ இயலும்
நானின்றியும் உன்னால் முடியும்
மறுப்பதற்கில்லை
இருப்பினும்
என் பிரியத்தின் இடத்தை
பிறிதொன்றால் எளிதாக
நிரப்பிடுவேன் என்றாயே
அன்று தான் முடிவு செய்தேன்
சலனப்படுத்தாத என் அன்பின் இடம்
உன்னுள் சமாதியாவதற்குள்
வெற்று புன்னகையுடன்
விலகிச் செல்வதென்று
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment