க்கா... க்கா...
கிளையில் வந்தமர்ந்தது ஓர் காகம்
உறவினர்கள் வருகிறார்களா?
விருந்தோம்பும் சூழலில்
நானில்லை என்றேன்
உந்தன் உறவினர்கள் வருவது
எனக்கெப்படி ஐயா தெரியும்
திறந்தே கண்டிராத
கதவுகளையும் சாளரங்களையுடைய
உன் செங்கல் குவி(டி)யலுக்கு
நானென்ன காலிங் பெல்லா
போன வாரம் தான் பித்ருக்களின்
கும்பிடு தேதி முடிந்தது
அமாவாசை அடுத்த வாரம்
விஷேச நாளும் இன்றில்லை
பிறகென்ன.?
வயிற்றுடன் வன்மம்
பசி பொறுக்குதில்லை
பழி தீர்க்க பார்க்கிறது
சில பருக்கைகளைத் தூக்கியெறி
ஆற்றிக் கொள்கிறேன்
இப்போதுதானே சொன்னேன்
விருந்தோம்பும் சூழலில்
நானில்லை என்று
உனக்கும் பொருந்தும்
அது
மௌனத்துடன் கூரலகு முகத்தைக்
கீழ் நோக்கித் திருப்பி பறக்க
எத்தனிகையில் சொன்னேன்
"கோபித்துக் கொண்டு
அடுத்த வாரம் அமாவாசைக்கு
வராமல் இருந்திராதே
வடை பாயசம் உண்டு"
மோனத்தின் திசையறியா மூலையில்
தான்தோன்றித்தனமாகத்
திரிந்திருக்கையில்
உதிர்ந்த ஓர் இலை உடலை
உரச விழித்தேன்
கண்முன்னே
காக்கைக்கான
வடை பாயச படையல்
காய்ந்த நரகலின் நிறத்தில்
நாறிக் கொண்டிருந்தது
கார்த்திக் பிரகாசம்...
உறவினர்கள் வருகிறார்களா?
விருந்தோம்பும் சூழலில்
நானில்லை என்றேன்
உந்தன் உறவினர்கள் வருவது
எனக்கெப்படி ஐயா தெரியும்
திறந்தே கண்டிராத
கதவுகளையும் சாளரங்களையுடைய
உன் செங்கல் குவி(டி)யலுக்கு
நானென்ன காலிங் பெல்லா
போன வாரம் தான் பித்ருக்களின்
கும்பிடு தேதி முடிந்தது
அமாவாசை அடுத்த வாரம்
விஷேச நாளும் இன்றில்லை
பிறகென்ன.?
வயிற்றுடன் வன்மம்
பசி பொறுக்குதில்லை
பழி தீர்க்க பார்க்கிறது
சில பருக்கைகளைத் தூக்கியெறி
ஆற்றிக் கொள்கிறேன்
இப்போதுதானே சொன்னேன்
விருந்தோம்பும் சூழலில்
நானில்லை என்று
உனக்கும் பொருந்தும்
அது
மௌனத்துடன் கூரலகு முகத்தைக்
கீழ் நோக்கித் திருப்பி பறக்க
எத்தனிகையில் சொன்னேன்
"கோபித்துக் கொண்டு
அடுத்த வாரம் அமாவாசைக்கு
வராமல் இருந்திராதே
வடை பாயசம் உண்டு"
மோனத்தின் திசையறியா மூலையில்
தான்தோன்றித்தனமாகத்
திரிந்திருக்கையில்
உதிர்ந்த ஓர் இலை உடலை
உரச விழித்தேன்
கண்முன்னே
காக்கைக்கான
வடை பாயச படையல்
காய்ந்த நரகலின் நிறத்தில்
நாறிக் கொண்டிருந்தது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment