புரிந்திடாதவர்களின் மத்தியில் பிணமாய் வாழும்
மனிதன் ஒருவனிடம் உரையாடினேன் சமீபத்தில்
பல வருடங்களாகிவிட்டன அவனுக்கு
அழுகை வருவது நின்று
செவிகள் கிடைக்காமல் செத்தேவிட்டன
அவன் எண்ணங்கள்
காதல் ~ அன்பு ~ பிரியம் போன்ற சொல்லாடல்கள்
மக்கிப் போன கழிவாகி மனதிலோ
சாக்கடை துர்நாற்றம்
தூங்காமலே விடிந்துவிடும் இரவுகளும்
விரக்தியிலேயே வடிந்துவிடும் பகல்களுமே
அவனுக்கு வாய்த்தவை
எல்லாவற்றையும் உதறிவிட்டுப் பறந்திட
வேண்டியதுதானே என்றேன்
யாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டுப்
பறந்திட எந்தவொன்று தடுக்கிறதோ
அதுவாகத்தான் நான் இருக்கிறேன்
என்றான்
கார்த்திக் பிரகாசம்...
மனிதன் ஒருவனிடம் உரையாடினேன் சமீபத்தில்
பல வருடங்களாகிவிட்டன அவனுக்கு
அழுகை வருவது நின்று
செவிகள் கிடைக்காமல் செத்தேவிட்டன
அவன் எண்ணங்கள்
காதல் ~ அன்பு ~ பிரியம் போன்ற சொல்லாடல்கள்
மக்கிப் போன கழிவாகி மனதிலோ
சாக்கடை துர்நாற்றம்
தூங்காமலே விடிந்துவிடும் இரவுகளும்
விரக்தியிலேயே வடிந்துவிடும் பகல்களுமே
அவனுக்கு வாய்த்தவை
எல்லாவற்றையும் உதறிவிட்டுப் பறந்திட
வேண்டியதுதானே என்றேன்
யாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டுப்
பறந்திட எந்தவொன்று தடுக்கிறதோ
அதுவாகத்தான் நான் இருக்கிறேன்
என்றான்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment