அவள் பிறந்து
முப்பது வருடங்களாகிவிட்டன
இன்றைய திகதிக்கு
இறந்தபின் வரும்
மூன்றாவது பிறந்த நாள்
வாழ்த்து மடலாகத் தொடங்கி
நினைவஞ்சலியாக
மாறி அழுகிறது
அவளுக்கான
பிறந்தநாள் கவிதை
வாடிய பின்னும் மலரும்
பிரியமானவளின் பிறந்தநாள்
மலர்க் கொத்துக்குள் மறைத்து வைத்து
அவளின் மரணச் செய்தியை
கரங்களில் திணிக்கிறது
மற்றுமொரு முறை
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment