Skip to main content

நாஞ்செலியன்

கொழுத்த மார்புகளைத்
தூக்கிச் சுமக்கும் வலி
சொல்லி மாளாது

பாறாங்கல்லைத்
தொங்கவிட்டது போல

சமயங்களில்
முகத்தைக் காணாமல்
வன்மத்தைக் கக்கியிருக்கிறேன்
பொருத்த அளவிலான மார்புடல்களில்

மாநகர பேருந்தில்
தினசரி கசங்கும்
முலைகளின் கணக்கில்
எனதிரு முலைகளுக்கும்
'அழுத்தமான'
இடமுண்டு

பால்மடியெனப்
பகடி செய்யும் ஆண்களிடம்
வருத்தமில்லை
ஆனால் பெண்களின் இழிவான
பார்வைச் சீண்டலில்
குறுகி அம்மணமாகிறேன்

முலைவரிச் சட்டம்
ஆண்களுக்குப் பொருத்தமெனில்
அறுத்தெறிந்திருப்பேன்
நாஞ்செலியின்
ஆண் உருவாய்

ராகவி

Comments