எழுதி அழிக்கப்பட்ட வார்த்தையைப் போல்
அடுத்த நொடியில்
அடையாளங்களைத் துறப்பது
ஆடைகளை அவிழ்ப்பது போல்
அவ்வளவு எளிதாய் இல்லை
பெயரும் முகமும்
பதிவில்லாத இடத்திலும்
அடையாளமற்று அலைந்திடும் வேளையில்
என்னுடனே
என் சட்டைப் பையிலே தங்கியிருக்கிறது
ஒரு நான்
ஒவ்வொன்றாய் தொலைத்தாலும்
புதிதாய் முளைத்துவிடுகிறது
ஒரு நான்
தீர்ந்தபாடில்லை
பிறகு தான் புரிந்தது
நான் என்பது ஒரு நான் அல்ல
அது நான்களின் தொகுப்பு
கடைசி நான் தீர்ந்தாலும்
வேறொரு நானாய்
இருந்தே தீருவேன்
நான்
அடுத்த நொடியில்
அடையாளங்களைத் துறப்பது
ஆடைகளை அவிழ்ப்பது போல்
அவ்வளவு எளிதாய் இல்லை
பெயரும் முகமும்
பதிவில்லாத இடத்திலும்
அடையாளமற்று அலைந்திடும் வேளையில்
என்னுடனே
என் சட்டைப் பையிலே தங்கியிருக்கிறது
ஒரு நான்
ஒவ்வொன்றாய் தொலைத்தாலும்
புதிதாய் முளைத்துவிடுகிறது
ஒரு நான்
தீர்ந்தபாடில்லை
பிறகு தான் புரிந்தது
நான் என்பது ஒரு நான் அல்ல
அது நான்களின் தொகுப்பு
கடைசி நான் தீர்ந்தாலும்
வேறொரு நானாய்
இருந்தே தீருவேன்
நான்
ராகவி
Comments
Post a Comment