Skip to main content

நான் மறந்துவிடுவேன்

யாரும்‌ ரசிப்பதற்குள்
நான் ரசித்திட வேண்டும்

யாரும் கருத்திடுவதற்குள்
நான் கருத்திட வேண்டும்

யாரும் எழுதிடுவதற்குள்
நான் பதிவிட வேண்டும்

யாரும் சொல்வதற்குள்
நான் சொல்லிவிட வேண்டும்

இப்படி முனைப்புடன் செயல்படுபவன்
ஆனாலென்ன
வந்த வேகத்தில் தொலைத்து
அடைந்த சுகத்தில் அலுத்து
யாரும் மறப்பதற்குள்
நான் மறந்துவிடுவேன்
என்னையும் சேர்த்து

கார்த்திக் பிரகாசம்...

Comments