Skip to main content

அலைவுறுதல்

ஒரே சமயத்தில் தனிமையை விரும்புபவளாகவும்
அதேசமயம் தனிமையைக் கண்டு
அஞ்சுபவளாகவும்
அதன் பகடியில்
சுயத்தை அருவருப்பவளாகவும்
தன்னிலே
வெறுப்பை உமிழ்பவளாகவும்
இருக்கிறேன்

எப்போது கிடைக்குமெனக்
கிடையாய் கிடந்து
கிடைத்த மாத்திரத்தில்
விரும்பியதையே
வெறுத்துத் தள்ளுகிறேன்

ஏனிந்த அலைவுறுதல்
அவசியமற்ற மெனக்கெடல்

முடிந்திடுமே என
பதற்றமா
விலகிடுமே எனப்
பாதுகாப்பின்மையா?

முடிந்தாலும் விலகினாலும்
வலித்திடும் நெஞ்சை
வலிந்து சுமந்திடும்
பாரமே

ராகவி

Comments