Skip to main content

வாழ மறந்த வாழ்வு

குழந்தைகளின் கதைகளில்
கெட்டவர்கள்
இல்லை

பூ
பூச்சி
ட்ராகன் டைனோசர்
எல்லாம் மனிதர்கள்

திருடியவன்
தீங்கிழைத்தவன் என
எல்லோருக்கும்
மன்னிப்பு உண்டு
கண்டிப்பாக

சட்டம் இல்லாத
சாட்சியம் அவசியமில்லாத
முகம் கோணியதும்
வெள்ளந்தி சிரிப்புடன்
பழம் விடும்
சிறு குழந்தையே
வாழ மறந்த வாழ்வுக்கான
பெரும் ஆறுதல்

கார்த்திக் பிரகாசம்...

Comments