Skip to main content
    சந்திரா வேலைக்குச் செல்ல மிக  தாமதமாகிவிட்டது..  ஒரு ஆளாக மகனின் திருமண வேலைகளை செய்து கொண்டிருப்பதால் அன்று எப்பொழுதும் செல்லும் நேரத்தை விட வெகு தாமதமாகி இருந்தது..

    பதற்றத்துடன் அவள் வீட்டினுள் நுழையும் போதே ராணியின் கண்களில் பட்டுவிட்டாள்.. ராணியின் வீட்டில் தான் சந்திரா வேலைப் பார்க்கிறாள்..

    ஏற்கனவே சந்திராவின் வருகைக்காகக் காத்திருந்த ராணி அவளைப் பார்த்ததும் கோவமாக திட்டினாள்.. தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டு விட்டு சமையல் அறைக்குச் சென்றாள். சந்திரா எப்பொழுதும் தாமதமாக வருபவள் அல்ல.. ஆனாலும் ராணி திட்டியதற்காக அவள் வருந்திக் கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த தெருவில் யாருமே வேலை தராத போது ராணி மட்டும் தான் பெரிய மனதோடு அவளுக்கு வேலைத் தந்தாள்..

   அதனால் எப்போதுமே சந்திராவிற்கு ராணியின் மீது பற்றும் மரியாதையும் அதிகமாக இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு ராணி சந்திராவிடம் ஒருபோதும் பரிவு காட்டியதில்லை..

   சமையலறைக்குள் சென்ற சந்திராவைப் பின் தொடர்ந்து அன்றைய வேலைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு முடிக்கும்படிச்
சொல்லி காரில் பறந்துவிட்டாள் ராணி.

   ராணியின் கடைசி மகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம். வீட்டில் கடைசி சுப நிகழ்ச்சி என்பதால் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. பத்து நாட்கள் முன்பே  சொந்த பந்தங்கள் வீட்டை அடைத்துக் கொண்டிருந்தனர்.

  எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ராணியின் வருகைக்காகக் காத்திருந்தாள் சந்திரா.. துணிக் கடைக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தாள் அவள். வெகு நேரமாகியும் ராணி வராததால் அவளின் மகளிடம் சொல்லிவிட்டு சந்திரா கிளம்பினாள்.

   ராணியின் வீட்டில் இருந்து கிளம்பிய சந்திரா நேராக துணிக் கடைக்குச் சென்றாள். மகனின் திருமணத்திற்காக தன் முதலாளியான ராணிக்குத் துணி எடுக்க முடிவெடுத்திருந்தாள்.

   எதிர்பாராதவிதமாக ராணியும் அதே கடையில் தான் துணி எடுத்துக்
கொண்டிருந்தாள். ஆனால் இருவரும் ஒருவரையொருவர் கவனிக்கவில்லை.

   ராணி கடைப் பையனிடம் மிக குறைந்த விலையில் ஒரு சேலையைக் காட்டச் சொன்னாள். கடைப் பையனும் சேலையைக் காட்டி விட்டு, இதுவரையில் எல்லா துணிகளையும் அதிக விலையில் எடுத்து விட்டு   இதை மட்டும் ஏன் குறைந்த விலையில் எடுக்குறீர்கள் என்று கேட்டான்..

   அதற்கு ராணி சொன்னாள், என் மகளுக்கு திருமணம். வீட்டில் எல்லோருக்கும் துணி எடுத்து விட்டேன். ஆனால் என் வீட்டு வேலைக்காரிக்கு துணி எடுக்க மறந்துவிட்டேன். அவளுக்குத் தான் இந்த சேலை என்றாள். கடைப் பையனும் புருவத்தைத் தாழ்த்திக் கொண்டே சேலையை அவளிடம் கொடுத்தான்.. சேலையைப் பெற்று கொண்டு ராணி நகர்ந்தாள்..

    ராணியைக் கவனிக்காத சந்திரா, சிறிது நேரத்தில் அந்த இடத்திற்குச் சென்றாள். அதே பையனிடம், இருக்கிறதிலேயே அதிக விலையில் உள்ள சேலைகளைக் காட்டச் சொன்னாள்.  அந்த பையன் சந்தோசமாக, சேலை யாருக்கு மா.? உங்களுக்கா...? என்ன விசேஷம்..? என்று கேட்டான்.

    சந்திரா சிரித்துக் கொண்டே சொன்னாள், "சேலை எனக்கில்லை தம்பி,  என் மகனுக்கு திருமணம் முடிவாயிருக்கு. என் முதலாளி அம்மாவிற்கு சேலை எடுத்து வைச்சு அவங்கள கல்யாணத்துக்கு கூப்படனும்னு ஒரு  ஆசை" அதான் என்றாள்.

   அந்த கடைப் பையனுக்கு சந்திராவின் குணத்தைப் பார்த்து பயங்கர சந்தோஷம். கடைப் பையன் இருவரையும் நினைத்து யோசித்தான்..

   பணம் இருப்பவர்களிடமெல்லாம் நல்ல குணம் இருப்பதில்லை.. ஆனால் பணம் இல்லாதவர்களிடம் கூட நல்ல மனமும், முடிந்ததை செய்ய வேண்டும் என்ற குணமும் இருப்பதை உணர்ந்தான்.

   தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் கொடுத்து, சேலை எடுத்துக் கொண்டு,  சந்திரா தன்னிறைவுடன் சென்றாள்...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...