வந்தவர்களையெல்லாம்
வாழ வைத்து விட்டு
அவர்கள் பல பேரின் வாயில்
இன்று வசைபட்டுக்
கொண்டிருக்கிறாய்...!!!
ஏற்கனவே மழையினால்
சிதைந்து விட்ட சூழ்நிலையில்
ஊட்டி வளர்த்த பலரின்
வார்த்தைகளால் இன்னும்
சித்ரவதை அனுபவித்துக்
கொண்டிருக்கிறாய்..!!!
வக்கற்று நின்ற போது
வாழ நம்பிகையூட்டி
என்னை வாழ்த்தியது
நீ மட்டும் தான்...!!!
இன்று
நீ
கலக்கமுற்று நிற்கும் போது
உன் மீது வெறுப்பை
உமிழ்பவன் நானல்ல...!!!
நான் எப்பொழுதும்
உன்னை காதலிக்கிறேன்..
ஆம்..!! நான் ஒரு
சென்னை காதலன்...!!!
அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு., முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்... நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும் நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும் பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை... நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது... என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்... நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...
Comments
Post a Comment