முதல் முறையாய் திருவண்ணமலைக்கு நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்தேன்.. இதற்கு முன் சென்றதில்லை என்பதால் கிளம்புவதற்கு முன் இருந்தே கோயிலைப் பற்றியும் மற்றும் கிரிவலம் பற்றியும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து கொண்டே இருந்தன...
காலை 3 30 மணிக்குக் கோயிலை அடைந்ததும் 4 15 க்கு தொடங்கிய கிரிவலத்தை சரியாக 6 30 மணிக்கு முடித்துவிட்டோம்..
கிரிவல பாதை மொத்தம் 14 கிமீ.. வழி நெடுகிலும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஏராளமான பக்தர்கள், தீபத்தை தரிசித்துக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தனர்..
கிரிவல பாதை பெரும்பாலும் மரங்களால் சூழ்ந்திருந்ததால் ரம்மியான சூழல் நிலவியது. அதிலும் அங்கு வீசும் காற்றில் நிரம்பியிருந்த மூலிகை மணத்தை, சுவாசிக்க சுவாசிக்க ஒரு புது விதமான புத்துணர்ச்சி உண்டாகியது..
நடக்க நடக்க நீண்டு கொண்டே இருந்த பாதைச் சுற்றி முடிக்கும் வரை ஒரு போதும் அலுப்பை ஏற்படுத்தவில்லை. எப்பொழுது முடியும் என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.. மாறாக அது முடிவைத் தேடாத பயணம் போல அமைந்தது..
மொத்தத்தில் திருவண்ணாமலை பயணம், எனக்கு புது புத்துணர்ச்சியையும் இன்னும் இது போன்ற பல பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் உண்டாக்கியுள்ளது...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment