மகனுக்கு அமெரிக்காவில் வேலை...
இத்தனை நாளாய் அப்பாவிற்கு ரொம்பத் தான் பெருமை...
ஆதலால் தான் என்னவோ, இன்று அவர் இறந்து கிடக்கும் போது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூட அவரது மகனால் வர இயலவில்லை...
தன் மகன் அமெரிக்காவிற்குச் சென்று வேலை செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்ட தந்தை, தான் இறக்கும் போது தன்னோடு மகன் இருக்க வேண்டும் அல்லது தன் இறுதி ஊர்வலத்திற்கு அவன் வர வேண்டுமென்று ஆசைப்படவில்லை போலிருக்கிறது..
தான் பிறந்த போது தன்னை முதல்முறையாக தொட்டிலில் தூக்கிப் போட்ட தந்தையை, அவர் இறந்த போது கடைசியாக சுடுகாட்டில் தூக்கி போட மகனால் முடியவில்லை...
மகன் சம்பாதித்து அனுப்பிய பணமெல்லாம் வீட்டில் உள்ள பீரோ முழுவதும் நிறைந்திருக்கின்றன. என்ன..! பாவம்..! அவற்றிற்கு அழத் தெரியவில்லை...
மகனோ அமெரிக்காவில் அப்பாவை நினைத்து அழுது கதறுகிறான்.. அவரது பாதங்களை தன் தலையில் வைத்து தொழத் துடிக்கிறான்.. ஆனால் என்ன அவனின் கண்ணீர்த் துளிகளைக் கண்டுக்கொள்ள கூட அங்கு ஆள் இல்லை...
உடனடியாக கிளம்ப பதறுகிறான். அவன் நேரம், விமானத்தில் இடம் கிடைக்கவில்லை.. இரண்டு நாட்கள் கழித்துத் தான் கிளம்ப முடியும். மகன் வரும் வரை காத்திருக்கவோ, பல வகையான நோய்களைக் கொண்டிருந்த தந்தையின் உடலுக்குப் பொறுமையில்லை...
ஆதலால், பெற்ற மகன் உயிரோடிருந்தும் அவன் நிழல் கூட விழாமல் தந்தையின் கடைசி பயணம் முடிக்கப்பட்டது...
வைரமுத்துவின் வலியான கவிதை வரிகள் மகனுக்கு ஞாபகம் வந்தன.. "பாசம் உள்ள வேளையிலே காசு பணம் கூடலையே...!!!
காசு உள்ள வேளையிலே பாசம் வந்து சேரலையே"...!!!
மகனின் கண்ணீர்த் துளிகள் வறண்டு போயிருந்தன...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment