Skip to main content
     ரயில் பயணம் எப்பொழுதுமே சில சுவாரசியமான அனுபவங்களை ஏற்படுத்தும்.. அதனாலேயே ரயில் பயணம் என்பது இதுவரையில் சுகமானதாகவே இருந்து கொண்டிருக்கிறது.
    இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்கொண்ட ரயில் பயணம் கூட பல விதமான அனுபவங்களை ஏற்படுத்தியது.. கூடவே சில தாக்கங்களையும் ஏற்படுத்தியது..
    பொதுவாக ரயில் பயணத்தின் போது பல புது மனிதர்களையும், சில வயதான அல்லது சில மாற்றுத்திறனாளிகள் பிச்சைக் கேட்டு வருபவர்களையும் காண நேரிடும்..
    ஆனால் அன்று சற்று வித்தியாசனமான முறையில் இருவர் உதவிக் கேட்டு வருவதைக் காண முடிந்தது..
    முதலில் ஒரு கர்ப்பமான பெண் தன் இடது கையை வயிற்றில் வைத்தவாறே உதவிக் கேட்டு வந்தார். பயணித்தவர்களில் சிலர் தங்களது சட்டைப் பையில் தீவிர தேடுதல் வேட்டை நிகழ்த்தி சில சில்லறை நாணயங்களைக் கொடுத்தனர். ஒரு சிலர் ஒன்னும் இல்லை என்று பிரக்ஞை செய்து அனுப்பினர்.
   அந்த கர்ப்பிணிப் பெண் சென்ற சில மணி நேரங்கள் கழித்து வேறொரு பெண்மணி ஒரு இளம்பெண்ணுடன் உதவிக் கேட்டு வந்தார்.
தன் மகள் ஒரு ஏழைப் பெண் என்றும், அவளின் திருமணத்திற்கு உதவுமாறும் கேட்டு வந்தார்.. பின்னால் இருந்து வயதானப் பெண் பேசிக் கொண்டிருக்க, நன்கு அலங்கரித்து கொண்டிருந்த அந்த இளம் பெண் ஒவ்வொரிடமும் கையேந்திக் கொண்டிருந்தாள். காசு கொடுத்தவர்களுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அடுத்தவரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் அந்த இளம்பெண்..
    அவர்கள் கடந்து சென்ற பிறகு வெகு நேரம் ஒரு குழப்பம் மனதில் நச்சரித்துக் கொண்டே இருந்தது..
     உண்மையிலேயே அந்த பெண் கர்ப்பிணித் தானா.? ஒரு வேளை அந்தப் பெண் உண்மையில் கர்ப்பிணியாக இருந்தால் இங்கு வந்து பிச்சை எடுத்துக் கொண்டிருப்பாளா.?
     அதே போல, திருமணம் செய்து வைக்க வேண்டி உதவி கேட்டது அந்த இளம்பெண்ணின் தாய் தானா.? அப்படியே தாயாக இருந்தாலும் பிச்சை எடுத்து பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய அவசியம் என்ன.?
இப்படி பலவித கேள்விகள் மனதில் எழுந்து கொண்டிருந்தன.. இறுதியில் ஒரு விடயம் தெளிவாகத் தெரிந்தது..
      தெரிந்தோ தெரியாமலோ, பல பெண்களின் புனிதமான கருவறைகள் குப்பை கூடங்களாக்க பட்டுக் கொண்டிருக்கின்றன.. அந்த கருவறையில் உருவான/உருவாகும் பல குழந்தைகள் சமுகத்தில் குப்பைகளாகத் தெருவில் தூக்கி எறியப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
யாரோ செய்த தவறினால் ஒன்றும் அறியாத குழந்தைகள் சமுகத்தில் கொடுமையான தீவிரவாதியாகவும், தெருவில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனாகவும், ஆதரவற்ற அனாதையாகவும் வளர்ந்து ஆளாகின்றனர்..
      ஜெயகாந்தன் "சில நேரங்களில் சில மனிதர்கள்" புத்தகத்தில் குறிப்பிட்டதைப் போல காமத்திற்கும்,ஒரு உயிர் உலகில் உருவாவதற்கும் எந்த சம்மந்தம் இல்லாமல் இருந்திருந்தால் பல குழந்தைகள் இன்று சமுகத்தில் குப்பைகள் ஆகாமல் இருந்திருப்பார்கள்.
       தம்மால் ஒரு உயிரைப் பெற்றால் இந்த உலகில் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் குழந்தைப் பெற்று கொள்வதைப் பற்றி யோசிக்கலாம். அந்த நம்பிக்கை இல்லாதவர்கள் சுகத்தை மட்டும் அனுபவித்துவிட்டு குழந்தை பெறாமல் இருப்பதே நல்லது..
குழந்தை பெற்றுவிட்டு நடுத் தெருவில் விடுவதற்கு அல்லது ஏதோ ஒரு தெருவில் அல்லது சிக்னலில் பிச்சை எடுக்க வைப்பதற்கு பெறாமலே இருந்துவிடலாம்.

தவறில்லை...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...