Skip to main content

Posts

Showing posts from January, 2016
காற்றுக்கு இருக்கும் சுதந்திரம் காற்றைத் தருவிக்கும் மரங்களுக்கு இல்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
மொக்கராசு ஒரு விவசாயி... அவருக்கு தெரிந்தது புரிந்தது எல்லாமே விவசாயம் மட்டும் தான் அவருடைய தாத்தா, அப்பா என்று குடும்பமே பரம்பர பரம்பரையாக விவசாயம் செய்து பிழைக்கும் குடும்பம்.. அவர்களின் குடும்பத்திற்கு விவசாயம் செய்வதில் ஒரு ஆத்ம திருப்தி இருந்தது... ஊரில் ஒவ்வொருவருக்குமே தன் பசியைத் தீர்த்துக் கொள்வது மட்டும் தான் நோக்கம்... ஆனால் விவசாயிக்கு மட்டும் தான் ஊரில் உள்ள ஒவ்வொரு உயிரின் பசியையும் தீர்த்து வைப்பது நோக்கம் என்று அடிக்கடி பெருமிதம் பேசுவார் மொக்கராசு... விவசாயியைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு தருணமமும் அவரின் கண்களில் ஒரு கர்வம் மின்னல் போல வந்து போகும்... மொக்கராசுவின் ஒரே மகன் சின்ராசு... அப்பாவின் ஆசைக்காக வேளாண்மை கல்வியைத் தேர்ந்தெடுத்து படிப்பவன்.. அப்பாவின் வேலைகளில் அவருக்கு உதவியாகவும் இருந்தான்... ஆனால் உண்மையில் அவனுக்கு இந்திய ராணுவத்தில் ஒரு நாளாவது நாட்டுக்காகப் பணிபுரிய வேண்டும் என்பது வாழ்நாள் கனவு... ஆனால், தந்தையின் மனதைப் புரிந்துக் கொண்ட மகனாக தன் ஆசையை மனதிற்குள்ளேயே வைத்திருந்தான்... இருந்தாலும் அவனுள்ளே அந்த ஆசைத்தீ அணையாமல் எரிந்துக் கொண்டே இருந்...

சாவுக்குச் சமர்ப்பணம்...

ஒரு மனிதன் வாழும் வரையில் அவனது குறைகளை மட்டுமே தேடிக் கண்டுபிடித்து கொண்டாடித் தீர்க்கும் இந்த சமூகம், அதே மனிதன் இறந்த பிறகு அவனது நிறைகளையும் கொஞ்சம் சல்லடையிட்டு கண் திறந்துப் பார்க்கிறது... இந்த உலகில் அனைவருமே குறையுள்ளவர்கள் தான்...  ஆனால் குறையின் மிகப் பெரிய பலமே ஒருவனின் மற்ற நிறைகளை மறக்க வைப்பதும் மறைத்து வைப்பதும் தான்... அந்த குறைகளையே மறக்க வைத்து ஒருவனின் நிறைகளை வெளியே கொண்டு வருகிறது என்றால் "சாவு" எவ்வளவு உயர்வானது... அந்த வகையில் சாவுக்கு ஒரு பெரிய சலாம் இடலாம் என்று தோன்றுகிறது... ஆனால் ஒருவனின் நிறைகளை இந்த சமூகம் போற்றுவதற்கு அல்லது மனதார பாராட்டுவதற்கு அவனின் சாவு வரையில் காத்திருக்க  வேண்டுமா என்ன...? ஒரு நாள் இராமகிருஷ்ண பரமஹம்சர் வீட்டில் இருக்கும் போது அவருடைய மனைவி சாரதா  தேவி சமையலுக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொண்டிருந்தார்... அப்பொழுது சிலவற்றை சல்லடையிலும், சிலவற்றை முறத்திலும் சுத்தபடுத்திக் கொண்டிருந்தார்... அமைதியாக அதைக் கவனித்துக் கொண்டிருந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் சாரதாவிடம், வாழ்க்கையில் நாம் சல்லடையாக இருப்பதை விட முறம...

மூன்றாம் உலகப் போர்...!!!

வைரமுத்துவின் வழக்கமான நாவல்களில் சற்று அல்ல அல்ல பெரிதும் மாறுபட்ட மகத்தான படைப்பு "மூன்றாம் உலகப் போர்".. புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய கணமே, ஒரு பரபரப்பு மனதைத் தன் வசப்படுத்திக் கொள்கிறது... நெஞ்சத்தின் ஓரத்தில் இதுவரை தோன்றிடாத பயமொன்று மெல்ல கசியத் தொடங்குகிறது... தன் நாவலின் பாத்திரப் படைப்புகளில், எதார்த்தத்தை அள்ளிக் கொட்டும் கவிஞர், இதில் தன் ஆதங்கத்தையும், அறிவியில் அறிவித்துள்ள அச்சங்களையும் சேர்த்து, தான் உண்டாக்கியப் பத்திரங்களின் மூலம் அறைகூவல் விடுத்திருக்கிறார்... விவசாயத்தைத் தவிர வேறொன்றும் அறியாத, அறிய விரும்பாத கருத்தமாயி... அவருக்கு உறுதுணையாக நின்று, தான் கற்ற கல்வி மற்றும் அனுபவம் மூலம் ஊரை மாற்றத் துடிக்கும் அவரின் இளைய மகன் சின்னப்பாண்டி.. ஊரை அடித்து உலையில் போடும் அவரின் மூத்த மகன் முத்துமணி... வேளாண்மை மற்றும் இயற்கை பற்றிய ஆய்வு கட்டுரை மூலம் இந்தியாவிற்கு வரும் எமிலி என்ற அமெரிக்கப் பெண்... சுனாமியில் தாய் தந்தையை இழந்த இஷிமுரா என்ற ஜப்பானிய இளைஞன்.. இவர்கள் தாம் முக்கியப் பாத்திரங்கள்... எமிலி மற்றும் இஷிமுரா பாத்திரங்கள் மூலம் நாம...
சென்னை புத்தகத் திருவிழா...!!! 'கணினி'யுகமானாலும் காகிதத்தின் மீதான மதிப்பு குறைந்து விடவில்லை.. புத்தகங்களெல்லாம் 'ஆப்'களாக மாறிக் கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு காலத்த...
எதிர்பாராதவொன்று  எதேச்சையாக நிகழும் போது எதிர்பார்ப்புகள் ஏடாகூடமாக எகிறி விடுகின்றன... கார்த்திக் பிரகாசம்...
துரும்பளவு துன்பமே என்றாலும் தாராளமாக வந்து தாமதமாக செல்கிறது உறவில்...!!! இம்மியளவே இன்பமாயினும் இதமாக இதயத்திலே நின்று விடுகிறது நட்பில்...!!! கார்த்திக் பிரகாசம்...
காலங்கள் ஓடிவிடும் காயங்களும் ஆறிவிடும் ஆனால் தழும்புகள் ஒருபோதும் மறையாது...!!! கார்த்திக் பிரகாசம்...
அந்தத் திண்ணைப் படியும் அன்னை மடியாய் அரவணைத்தது அவன் சொந்தமாக கட்டிய வீட்டில்...!!! கார்த்திக் பிரகாசம்...
நேத்து இராத்திரி அம்மம்மா...!!! நாசாமாப் போன கொசு தொல்ல ஒருபக்கம்...!!! நண்பனோட கொரட்ட தொல்ல ஒருபக்கம்...!!! மொத்தத்தல தூக்கம் இன்னும் போகவே இல்ல ஏன் போகலையாவா...??? வந்தா தானய்யா ...
"மனிதனை விடவும் கொடிய மிருகமொன்று இல்லை"...!!! கார்த்திக் பிரகாசம்...

இரட்டை மகிழ்ச்சி...!!!

அவனுக்கோ ஆசைப்பட்ட பொருளை வாங்கிய மகிழ்ச்சி...!!! அந்தப் பொருளுக்கோ அவனை தனக்கு அடிமைப்படுத்திய  மகிழ்ச்சி...!!! கார்த்திக் பிரகாசம்... 
ஆறுதலும் அறிவுரையும் சேர்ந்தே வருகின்றன...!!! கார்த்திக் பிரகாசம்...
சில வருடங்களுக்கு முன்பெல்லாம் அந்த ரோட்ல ஒரு காலேஜ்க்குன்னு ஒரு பஸ் ஸ்டாப் இருந்துச்சு... ஆனா  இப்போ அதே ரோட்ல போய் பாத்தா ஒரு பஸ் ஸ்டாபுக்கு ஒரு காலேஜ் இருக்கு... எண...
ஒவ்வொரு பிறப்பும் உயிர்கள் புணர்வதால் நேரும் உயிரியல் விபத்து...!!! கார்த்திக் பிரகாசம்...

அறம்...

ஜெயமோகன் எழுதிய அற்புதமான படைப்பு... பனிரெண்டு சிறுகதைகள் மூலம், அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி வாழ்ந்த உண்மை மனிதர்களின் கதைகளை மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார்.. புத்தகம் படித்து முடித்த பின்பும் அந்த மனிதர்களின் தாக்கங்கள் மனதில் நீக்கமற நிறைகின்றன.. குறிப்பாக சோற்றுக் கணக்கில் வரும் "பெத்தேல் சாகிப்", கோட்டியில் வரும் "பூமேடை ராமையா", யானை டாக்டரில் வரும் "டாக்டர் கிருஷ்ணமூர்த்தி"  மற்றும் வணங்கானில் வரும் "நேசமணி" ஆகிய நால்வரும் மனதை மிகவும் கவர்ந்து விடுகின்றனர்.. அவர்கள் யாரென்றே நமக்குத் தெரியாது ஆனால் புத்தகத்தைப் படித்த முடித்த தருணத்தில் அவர்களின் மீது அளவு கடந்த மரியாதை ஏற்பட்டு விடுகிறது..   "அறம்" என்பது நாம் மற்றவர்களிடம் எதிர்ப்பார்ப்பது மட்டுமல்ல, "எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அளிப்பது" மற்றும் "மற்றவர்களுக்கு மட்டுமல்ல, முதலில் நமக்கு நாம் உண்மையாக இருப்பது" என்பதை பனிரெண்டு சிறுகதைகளின் மூலமாக அழுத்தமாக அளித்திருக்கிறார் ஜெயமோகன்... கார்த்திக் ப...
இன்றைய செய்திகளைப் புரட்டும் போது மகிழ்ச்சியான செய்தியொன்று கண்ணில் தென்பட்டது... சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை "சுற்றுலா கப்பல் போக்குவரத்து" தொடங்க மத்திய...
உங்களுக்கு டீ யா..? காபி யா.? என்றுக் கேட்டு ஒரு கையில் வாங்கிக் கொடுத்து கொண்டே மறு கையில் டீ சிந்தியிருந்த மேஜையைத் துடைத்துக் கொண்டிருந்தான் மணி.. அவன் அந்த டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்து வருடம் நான்கு ஆயிருந்தது.. வந்த வாடிக்கையாளர்களைக் கவனிப்பது, டீ காபி எடுத்துக் கொடுப்பது, பால் வாங்கி வருவது, மேஜை துடைப்பது, கடையைச் சுத்தமாக பெருக்கி குப்பையை அள்ளுவது என்று காலையில் கடை திறந்தது முதல் இரவில் மூடும் வரை பம்பரமாக சுழல்வான்.. மணிக்கு நிறைய படித்துப் பெரிய கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. அவ்வாறு கலெக்டர் ஆனவுடன் முதலில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மனதில் அடிக்கடி சொல்லிக் கொள்வான்.. ஏனென்றால் அவனின் தந்தை ஒரு குடிக்காரர். குடியினால் ஒரு குடும்பம் எப்படியெல்லாம் உரு தெரியாமல் சிதைந்துப் போகிறது என்பதை நேரடியாக அனுபவித்திருந்தான்.. குடியினால் குடும்பத்தை கைவிட்ட தந்தையையும், அதனால் கானலாகிப் போன தன் கனவுகளையும் நினைத்து அவன் வருந்தாத நாளே இல்லை. அவன் வயதையொத்தப் பள்ளி மாணவர்கள், அவனது கண்களில் விழுந்து செல்லும் போதெல்லாம் அவன் மனக்கண்ணில் தூசி விழுந்து கண்ணீர் நெஞ்...
வழக்கம் போல, நீண்ட நேர காத்திருப்பிற்குப் பின், கடும் போக்குவரத்து நெரிசலில் இருந்து மீண்டு வந்த ஒரு பேருந்தில் நானும் நண்பனும் ஏறினோம்.. . பேருந்தில் கூட்டம் அதிகம் இல்லை. ஆனால் பேருந்தில் பெரும்பாலோனோர் பெண்களாக இருந்தனர். பேருந்தின் நடத்துனரும் ஒரு பெண்ணாக இருந்தார்.ஆதலால் ஏறும் முன், "இது பெண்கள் பேருந்தா..."? இல்லை என்று கேட்டு உறுதி செய்துக் கொண்டு ஏறினோம்... இதற்கு முன் பெண் நடத்துனரைக் காணாததால், அவரின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.. பேருந்தில் ஏறிய மற்றும் இறங்கிய அனைத்துப் பயணிகளிடமும் மிகவும் கணிவாக நடந்துக் கொண்டார். சில்லறைக் கேட்டார் இல்லாவிட்டால் சில்லறைக் கொடுத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பெண்மணி, நான்கு ரூபாய் பயணச்சீட்டிற்கு ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினார். சில்லறை இல்லையா என்றார். இல்லை என்றதும் கடும் சொல் சொல்லாமல், முகம் சுளிக்காமல் மீதிச் சில்லறையைக் கொடுத்துவிட்டார். அதிலும் அந்தப் பெண்மணி, ஒரு பத்து ரூபாய்த் தாள் நன்றாக இல்லை வேற கொடு என்று மீண்டும் நீட்டினார், அதற்கும் அந்தப் பெண் நடத்துனர் ஏதும் சொல்லாமல் வேறொரு பத்து ரூபாய்த்...
"எல்லாம் எனக்குத் தெரியும்" என்ற போதை மயக்கமும் "தெரியாததைத் தெரியாது" என்று ஒப்புக் கொள்வதில் தயக்கமும் சூழ்நிலைகளைச் சுட்டெரித்து சந்தர்பங்களைச் சாம்பலாக்கி விடும்... கார்த்திக் பிரகாசம்...
சிறு வயதில் வண்ணங்களின் மீது ஒருவித கவர்ச்சி இருந்தது.. வண்ணமயமான உடைகளை அணிந்து நண்பர்களின் முன் தன்னைத் தனிக்காட்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் என் மனதில் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் வயதில் வளர வளர வண்ணங்களின் மீதான கவர்ச்சி காணாமல் போய் விட்டது. வண்ணங்களின் மீதான கவர்ச்சி காணாமல் போய்விட்டது என்று சொல்வதை விட கருப்பு நிறத்தின் மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். கருப்பு நிறம் பிடித்திருப்பதற்கு ஒரே காரணம், அந்த நிறம் எனக்கு பிடித்திருக்கிறது. அவ்வளவு தான். மற்ற சாயங்கள் வேண்டாம், கருப்பு நிற சாயமே எனக்குப் போதும் என்று நான் தேர்தெடுத்துக் கொண்ட பிறகு, அந்த கருப்பு நிறத்திற்கும் பல சாயங்கள், காரணங்களாக மற்றவர்களால் பூசப்படுகிறது. பெரியாரின் பகுத்தறிவில் ஆரம்பித்து காதல் தோல்வி வரை ஏகப்பட்ட சாயங்கள் கருப்பு நிறத்தின் மீது தெளிக்கப்படுகிறது.. கருப்பு நிறம் என்பது, அனைத்து நிறங்களையும் உள்வாங்கிக் கொண்டு எதையும் பிரதிபலிக்காத போது உண்டாகிறது.. அது போலத்தான் , எந்தவொரு தனிப்பட்ட கருத்தையோ அல்லது உணர்ச்சியையோ பிரதிபலிப்பதற...
பணம்... உயிரற்றவைகளுக்கெல்லாம் உயிர்க் கொடுக்கிறது... உயிருள்ளவைகளுக்கெல்லாம் உள்ளத்தைக் கெடுக்கிறது... கார்த்திக் பிரகாசம்...
மணிக்கு நண்பர்களோடு இருப்பதென்றால் அப்படியொரு இன்பம். நண்பர்களோடு சந்தோசமாக ஊர் சுற்றுவதும், இரவு நேர ஹோட்டல்களில் குடிப்பதும் தான் அவனுடைய தினசரி முக்கிய வேலையாக இருக்கும்.. மணிக்கு உண்மையில் மதுக் குடிக்கும் பழக்கம் இல்லையென்றாலும் நண்பர்களுக்காகச் செல்வான்.. ஆனால் அனைவர் குடித்ததர்க்கும் சேர்த்து மணி தான் எப்பொழுதுமே பணம் செலுத்துவான்... ஒவ்வொரு முறை நண்பரகளோடு வெளியே செல்லும் போதும் 4000, 5000 என்று தண்ணீர்ப் போல பணத்தை வாரி இறைப்பான்.. அப்படி, பணம் செலவிடுவதற்காக அத்தனை வருடங்களில் அந்த ஒருநாள் வரும் வரையிலும் அவன் ஒருபோதும் வருந்தியதே இல்லை. அன்று, தூரத்து உறவினர் ஒருவரின் இல்லத் திருமண விழாவிற்காகத் தனது சொந்த ஊர் கிராமத்திற்குச் சென்றிருந்தான் மணி. கண்டு வெகு நாட்கள் ஆயிருந்ததால் அவனது உறவினர்கள் வெகுவாக நலம் விசாரித்தனர்.. பாச மழையைப் பொழிந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலேயே தங்கச் சொல்லி மணியைப் பாசத்தினால் கட்டாயபடுத்தினர். இறுதியாக அவனது அத்தை வீட்டில் தங்கினான். அவனது அத்தை அந்த ஊரில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுபவர். நாட்கள் உறவினர்களுடன் மகிழ்ச்ச...
என்னை  நீ என்னைப் போல் ஏற்க இயலாததனால் உன்னை நான் உன்னைப் போல் ஏற்றுக் கொண்டேன்... விளைவோ என்னானது...? பிரிவுதான் என்றானது...! கார்த்திக் பிரகாசம்...
அவள் எறிந்த வார்த்தைகளில் எரிந்து போனது காற்றும்...!!! உதிர்ந்து போனது  நிலவும்...!!! கார்த்திக் பிரகாசம்...