பனிரெண்டு சிறுகதைகள் மூலம், அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி வாழ்ந்த உண்மை மனிதர்களின் கதைகளை மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார்.. புத்தகம் படித்து முடித்த பின்பும் அந்த மனிதர்களின் தாக்கங்கள் மனதில் நீக்கமற நிறைகின்றன..
குறிப்பாக சோற்றுக் கணக்கில் வரும் "பெத்தேல் சாகிப்", கோட்டியில் வரும் "பூமேடை ராமையா", யானை டாக்டரில் வரும் "டாக்டர் கிருஷ்ணமூர்த்தி" மற்றும் வணங்கானில் வரும் "நேசமணி" ஆகிய நால்வரும் மனதை மிகவும் கவர்ந்து விடுகின்றனர்.. அவர்கள் யாரென்றே நமக்குத் தெரியாது ஆனால் புத்தகத்தைப் படித்த முடித்த தருணத்தில் அவர்களின் மீது அளவு கடந்த மரியாதை ஏற்பட்டு விடுகிறது..
"அறம்" என்பது நாம் மற்றவர்களிடம் எதிர்ப்பார்ப்பது மட்டுமல்ல, "எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அளிப்பது" மற்றும் "மற்றவர்களுக்கு மட்டுமல்ல, முதலில் நமக்கு நாம் உண்மையாக இருப்பது" என்பதை பனிரெண்டு சிறுகதைகளின் மூலமாக அழுத்தமாக அளித்திருக்கிறார் ஜெயமோகன்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment