Skip to main content
மணிக்கு நண்பர்களோடு இருப்பதென்றால் அப்படியொரு இன்பம். நண்பர்களோடு சந்தோசமாக ஊர் சுற்றுவதும், இரவு நேர ஹோட்டல்களில் குடிப்பதும் தான் அவனுடைய தினசரி முக்கிய வேலையாக இருக்கும்..

மணிக்கு உண்மையில் மதுக் குடிக்கும் பழக்கம் இல்லையென்றாலும் நண்பர்களுக்காகச் செல்வான்.. ஆனால் அனைவர் குடித்ததர்க்கும் சேர்த்து மணி தான் எப்பொழுதுமே பணம் செலுத்துவான்... ஒவ்வொரு முறை நண்பரகளோடு வெளியே செல்லும் போதும் 4000, 5000 என்று தண்ணீர்ப் போல பணத்தை வாரி இறைப்பான்.. அப்படி, பணம் செலவிடுவதற்காக அத்தனை வருடங்களில் அந்த ஒருநாள் வரும் வரையிலும் அவன் ஒருபோதும் வருந்தியதே இல்லை.

அன்று, தூரத்து உறவினர் ஒருவரின் இல்லத் திருமண விழாவிற்காகத் தனது சொந்த ஊர் கிராமத்திற்குச் சென்றிருந்தான் மணி. கண்டு வெகு நாட்கள் ஆயிருந்ததால் அவனது உறவினர்கள் வெகுவாக நலம் விசாரித்தனர்.. பாச மழையைப் பொழிந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலேயே தங்கச் சொல்லி மணியைப் பாசத்தினால் கட்டாயபடுத்தினர்.

இறுதியாக அவனது அத்தை வீட்டில் தங்கினான். அவனது அத்தை அந்த ஊரில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுபவர். நாட்கள் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கழிந்தன. ஒவ்வொரு நிமிடத்தையும் மணி மனதார மகிழ்ந்து வழியனுப்பினான்.

விழா முடிந்து அனைவரும் அவரவர் ஊருக்குக் கிளம்பினர். மணியும் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனது அத்தை அவனோடு சில நேரம் பேச வேண்டுமென்று அழைத்தாள்.

மணியும் எழுந்து சமையலறைக்குச் சென்றான். அத்தை எதையோ சொல்ல தயங்குவதை உணர்ந்த மணி, எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் பரவாயில்லை... என்று அனுமதி அளித்தான்.. அவன் அத்தை.., "இந்த கிராமத்தில் நிறைய குழந்தைகள் படிக்கும் ஆர்வமிருந்தும், தங்கள் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையினால் கல்வி கற்க முடியாத அவலநிலையில் உள்ளனர். நானும் எனது நண்பர்களும் எங்களால் முடிகின்றவரை சிலக் குழந்தைகளின் படிப்பு செலவை செய்கிறோம்.. நீயும் உன்னால் இயன்றதைக் கொடுத்தால் இயலாத பலக் குழந்தைகள் கல்வி பெறுவர்.." என்றாள்..

ஒரு குழந்தைக்கு, ஒரு வருடத்திற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டான்.. அவன் அத்தை, 4500 முதல் 5000 வரை ஆகும் என்றாள். மணிக்குத் தூக்கிவாரிப் போட்டது.. இத்தனை வருடமாய் அனாவசியமாய், அதுவும் குடிப்பதற்காக அவன் செலவிட்ட பல 4000 மற்றும் 5000 ரூபாய்களை நினைத்து பார்த்தான்.

தான் இத்தனை நாளாய் அனாவசியமாய் செலவு செய்த பணம், அந்த கிராமத்தில் வசிக்கும் பல பேரின் கல்விக்கு அத்தியாவசியமாய் இருப்பதை உணர்ந்து மனம் உடைந்தான்.. இதயம் படபடத்தது.. கைகள் நடுங்கின..
பணம் இல்லாததால் அவர்களுக்கு ஏற்படும் அவமதிப்பையும், தன்னைப் போன்ற பணத்தில் புரள்பவர்கள் பணத்திற்கு ஏற்படுத்தும் அவமதிப்பையும் எண்ணி மனம் புழங்கினான்..

அன்று முதல் வீண் விரையங்களை நிறுத்தினான். மது, ஹோட்டல் போன்ற செலவுகளைத் தவிர்த்தான். ஆனால் நண்பர்களைத் தவிர்க்கவில்லை. தன் சம்பளத்தின் ஒரு பெரும் பகுதியை ஏழைக் குழந்தைகளின் கல்விக்கென செலவு செய்தான்...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...