வழக்கம் போல, நீண்ட நேர காத்திருப்பிற்குப் பின், கடும் போக்குவரத்து நெரிசலில் இருந்து மீண்டு வந்த ஒரு பேருந்தில் நானும் நண்பனும் ஏறினோம்.. . பேருந்தில் கூட்டம் அதிகம் இல்லை. ஆனால் பேருந்தில் பெரும்பாலோனோர் பெண்களாக இருந்தனர். பேருந்தின் நடத்துனரும் ஒரு பெண்ணாக இருந்தார்.ஆதலால் ஏறும் முன், "இது பெண்கள் பேருந்தா..."? இல்லை என்று கேட்டு உறுதி செய்துக் கொண்டு ஏறினோம்...
இதற்கு முன் பெண் நடத்துனரைக் காணாததால், அவரின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன்..
பேருந்தில் ஏறிய மற்றும் இறங்கிய அனைத்துப் பயணிகளிடமும் மிகவும் கணிவாக நடந்துக் கொண்டார். சில்லறைக் கேட்டார் இல்லாவிட்டால் சில்லறைக் கொடுத்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பெண்மணி, நான்கு ரூபாய் பயணச்சீட்டிற்கு ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினார். சில்லறை இல்லையா என்றார். இல்லை என்றதும் கடும் சொல் சொல்லாமல், முகம் சுளிக்காமல் மீதிச் சில்லறையைக் கொடுத்துவிட்டார். அதிலும் அந்தப் பெண்மணி, ஒரு பத்து ரூபாய்த் தாள் நன்றாக இல்லை வேற கொடு என்று மீண்டும் நீட்டினார், அதற்கும் அந்தப் பெண் நடத்துனர் ஏதும் சொல்லாமல் வேறொரு பத்து ரூபாய்த் தாளைக் கொடுத்தார்..
இந்தப் பேருந்து, அந்த இடத்திற்குப் போகுமா, இந்த இடத்திற்குப் போகுமா என்றவர்களிடத்திலெல்லாம் போகும், போகாது என்று பொறுப்புடனும் மரியாதையுடனும் பதில் சொன்னது மட்டுமில்லாமல், அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு எந்தப் பேருந்து ஏறினால் போகலாம் என்பதையும் தெளிவாகப் புன்னகையுடன் குறிப்பிட்டார்..
நெரிசலில் பெரும்பாலும் சோர்வையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் விதமாக அமையும் போக்குவரத்துப் பயணம், இந்த நடத்துனரின் செயல்களால் உற்சாகமாக அமைந்தது.எனக்கு ஏற்பட்ட அந்த உணர்வு அந்தப் பேருந்தில் பயணித்த அனைத்து அல்லது பெரும்பாலான பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை..
மேலும் இதுப் போன்று, பெண்கள் பொதுப் பணியில் இயங்கும் போது, அத்துறையில் எந்த விதமான நல்ல தாக்கங்கள் ஏற்படும் என்பதை கண்ணெதிரே காண முடிந்தது...
பெண்கள் பொதுப்பணிக்கு வந்தால் சமூகம் ஒரு குடும்பமாகும். பெண்களின் பொறுமையும் பொறுப்புணர்வும் சமூகம் என்னும் குடும்பத்தை நல்வழிப்படுத்தும்...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment