சாதியை மறுத்து ஆசைப்பட்டவனைக் கரம் பிடித்ததற்காக, நடு ரோட்டில், ஜன நடமாட்டம் நிறைந்த பகுதியில், அதுவும் பட்டப் பகலில் ஒரு கும்பல் கொலை செய்ய துணிந்து, இருவரையும் சரமாரியாக வெட்டித் தள்ளியுள்ளது. அதில் அந்த இளைஞன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டான்.. அந்தப் பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.. சந்தோசமாக வாழ, கரம் பிடித்து இணைந்தவர்களின் கனவுகளை நடு ரோட்டில் கொன்று, தன் கோரப் பசிக்கு இரையாக்கிக் கொண்டுள்ளது சாதி... காதலிப்பதும், காதலித்தவனையே திருமணம் செய்து கொள்வதும் அவ்வளவுப் பெரிய குற்றமா...? பெற்ற பிள்ளைகளை விட, அவர்களின் விருப்பத்தை விட சாதி தான் முக்கியமா...? சாதியினால் வருவது மட்டும் தான் கௌரவமா...? வேறொரு சாதியில் காதலித்து திருமணம் செய்து கொண்டதற்கு பரிசு, நடுரோட்டில் அவர்களை கொலை செய்வதா...? பிள்ளைகளின் உயிரை விட சாதி உணர்வு பெரிதா...? கொலை செய்வதே இழிவான, மனிதத் தன்மையற்ற செயல். ஆனால் அந்தக் கொலைக்குப் பெயர் "கௌரவக் கொலை" . சாதியைக் கொண்டு அவர்கள் ஆயிரம் விஷயங்களை சாதித்திருக்குலாம். ஆனால் இழந்த அந்த இளைஞனின் உயிரை மீண்டும் பெ...