உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் பலத்த போட்டி மனப்பான்மையுடன் தெருவோரத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தினர்...
விடுமுறை என்றாலே அந்த தெருவின் ஓரத்தில் சிறுவர்கள் அனைவரும் கூடி விடுவர்.. அவர்கள் பெரும்பாலும் விளையாட தேர்ந்தெடுப்பது என்னவோ கிரிக்கெட்டைத் தான்.. 35 டிக்ரியோ அல்லது 45 டிக்ரியோ வெயிலின் தாக்கத்தைப் பார்த்து அவர்கள் கலங்கியதே இல்லை. "வெயில் பாட்டுக்கு அடிக்கட்டும் நாம பாட்டுக்கு விளையாடுவோம்" என்றளவில் மட்டும் தான் அவர்கள் வெயிலுக்குக் காட்டும் பயமும் மரியாதையும்...
இதுப் போன்ற விடுமுறை நாட்களில் மணி அவர்களை ஒருபோதும் கவனிக்க தவறியதில்லை..
அவர்களில் யாரும் ஏழாம் வகுப்பு தாண்டியிருக்க வாய்ப்பில்லை.. ஆனால் விளையாட்டில் முழுமையான ஈடுபாடு இருப்பது நன்றாகத் தெரியும். அவர்களில் அனைவருமே பேட்ஸ்மேன்.. அனைவருமே பௌலர். சர்வதேச போட்டியின் விதிமுறைகளைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை.. ஒவ்வொரு முறை விளையாடும் போது சூழ்நிலைகளைப் பொருத்து அவர்களின் விதிமுறைகள் மாறிக் கொண்டே இருக்கும்..
சுற்றுவட்டாரத்தில் கார் இருந்தால், காரில் பட்டால் அவுட். தொடர்ந்து மூன்று முறை பேட்ஸ்மேன் பந்தை அடிக்காவிட்டால் அவுட். ஒன் பிட்ச் கேட்ச் அவுட். பேட்ஸ்மேன் டீம் ஆள் தான் கீப்பராக நிற்க வேண்டும். காமன் மேன்க்கு ஓவர் கிடையாது. காமன் மேன் இடது கையில் தான் பேட் பிடிக்க வேண்டும். வாகனம் எதாவது வந்தால் பிரேக்..." என அவர்களுக்கென்று விதிமுறைகள். பந்து தொலைந்துவிட்டால் மட்டும் அன்றைய போட்டி அதோடு கைவிடப்படும்.
தெருவில் நடந்துச் செல்பவர்களும், மொட்டை மாடியில் துணி உலர வைக்க வருபவர்களும், காய்கறி வாங்க தெருவிற்கு வருபவர்களும் தான் அவர்களின் பார்வையாளர்கள்..
பலநேரங்களில் அவர்களை பார்க்கும் போது, சூரியன் மேலே இருந்து அவர்களின் எனெர்ஜியை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக் கொண்டிருப்பது போல மணிக்குத் தோன்றும்.. ஆனால் அவர்களோ வியர்வையை துடைத்தெறிந்துவிட்டு அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள்..
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment