Skip to main content
பிரியா உறுதியாகச் சொல்லிவிட்டாள். லட்சக் கணக்கில் வரதட்சணை தந்தால் தான் நடக்கும் என்றால் எனக்கு திருமணமே வேண்டாமென்று...!!

அவள் அதைச் சொன்னதில் இருந்தே கேசவனுக்கும், சாந்திக்கும் தூக்கமே இல்லாமல் போய்விட்டது.. கண்ணை மூடினால் பிரியாவின் திருமணத்தைப் பற்றிய நினைப்பு தான் இருவருக்கும்...!

ஒரேயொரு மகளைப் பெற்று, அவளை ஆசை ஆசையாக வளர்த்து, அவளின் திருமணத்திற்காக லட்சக் கணக்கில் சொத்துகளையும் சேர்த்து வைத்திருந்தார் கேசவன்..

ஒரே மகள் என்பதால் பிரியாவை பாசமாக பார்த்துக் கொண்டார்கள். அவளின் விருப்பத்திற்கேற்பவே வளர்த்தனர்.

பிரியா சுயமாக முடிவு எடுக்கம்படியே வளர்ந்தாள். ஆனால் திருமண பேச்சை எடுக்கும் போது, இப்படி ஒரு முடிவை முடிவாய்ச் சொல்லுவாள் என்று அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.. அதுவும் பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை, இருக்கும் போது இவள் ஏன் இப்படியொரு முடிவு எடுத்திருக்கிறாள் என்று அவர்களுக்கு புரியவில்லை.

அன்றும் தரகர் வந்திருந்தார்.. இரண்டு மூன்று வரன்களையும் காண்பித்தார்..

"..எல்லாமே பெரிய இடம்.. வரதட்சணை மட்டும் பார்த்து செய்தாள் போதும்... உங்க பொண்ண கண்ணுக்குள்ளே வச்சிப் பாத்துப்பாங்க..ஒரே ஒரு பொண்ணத் தானே பெத்துருகீங்க.. அவளுக்கு செய்யாமா வேற யாருக்கு செய்ய போறீங்க.." தரகர் தன் கமிஷனுக்காகத் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தார்...

தரகர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த கேசவன், நானா கொடுக்கமாட்டேனு சொல்கிறேன் என்று மனதில் நினைத்து வேதனை அடைந்தார்...

ஆனால் தரகர் காட்டியவற்றில் ஒரு வரன், கேசவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.. பையனுக்கு மாசம் 85,000 சம்பளம். பாரின் ரெட்டர்ன் வேற.. தங்கை தம்பி என்று எந்தத் தொந்தரவும் இல்லை.. ஒரே பையன்..
பிரியாவிடம் எப்படியாவுது பேசி சம்மந்தம் வாங்கிவிட வேண்டுமென்று உறுதிக் கொண்டார்..

வெளியே சென்றிருந்த பிரியா வீட்டிற்கு வந்தாள். கொஞ்சம் நேரம் விட்டுவிட்டு சாப்பிட உட்காரும் போது, மெதுவாக கேசவன் ஆரம்பித்தார்..

"பிரியா.. பையன் ரொம்ப நல்லவன்.. நிறைய சம்பாதிக்கிறான்.. போட்டோ பாத்தினா உனக்கே ரொம்ப புடிச்சுடும் என்று பிரியாவை சம்மதிக்க வைக்க முயன்று கொண்டிருந்தார்...

பிரியா பதில் ஏதும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டு விட்டு எழுந்து நடந்தாள்... "என்னமா எதுமே சொல்லாமப் போற..." கேசவன் கேட்டார்

அப்பா, எப்படியாவுது என்னை விற்று விடலாமென்று முடிவு செய்து விட்டிர்களா..?

நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேனு சொல்லல ஆனால் கல்யாணம் நடக்கணும் அப்படிங்கறதுக்காக வரதட்சணைக் கொடுத்து என்னை ஏன்பா ஒரு சந்தை விலைப் பொருள் மாதிரி ஆக்குறீங்க. எவன்னே தெரியாதவன் என்னை கல்யாணம் செஞ்சுக்க வரதட்சணைங்கற பேருல ஒரு விலை சொல்றான். அதுக்கு நீங்க சரின்னு சொன்னது மட்டுமில்லாம என்கிட்டையே சம்மந்தம் கேக்றீங்களே அப்பா..

புருஷன் பொண்டாட்டி உறவு என்பது எந்தவித பிரதிபலனையும் ஒருத்தர்கிட்ட இருந்து இன்னொருத்தர் எதிர்பார்க்காம, அன்பையும் ஆறுதலையும் வாழ்நாள் முழுதும் கொடுக்குறது தானப்பா... அந்த உறவை ஏன்பா வரதட்சணை கொடுத்தோ வாங்கியோ கொச்சைபடுத்தணும்.. பணத்தையோ அல்லது வேற பிரதிபலனையோ எதிர்பாக்குற இடத்துல அன்பு எப்படிப்பா இருக்கும்...

திருமணம் செய்து கொள்வதற்காக எந்தப் பிரதிபலனும் எதிர்பாராத ஒருவன் இருக்கிறான் என்றால் சொல்லுங்கள்.. உடனே திருமணம் செய்து கொள்கிறேன்..

இதைச் சொல்லி முடிக்கும் போதும், அவளையே அறியாமல் பிரியா அழுந்திருந்தாள்..

கேசவன் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தார்.. சாந்தி ஓடோடி வந்து அணைத்துக் கொண்டாள்... உனக்கு வாழ்க்கைத் துணையாக வரப் போகிறவன் ரொம்ப கொடுத்துவைத்தவன் பிரியா என்றுச் சொல்லி அழுதாள்..

எதேச்சையாக வீட்டிற்கு வந்த மணி, பிரியா பேசுவதைக் கேட்டு கதவருகிலேயே நின்றுக் கொண்டிருந்தான்.. மணி பிரியாவின் நெருங்கிய தோழன்...

எட்டாம் வகுப்பிற்காகப் புதிய பள்ளியில் சேர்க்கப்பட்டபொழுது, பிரியா தான் மணியைத் தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவாள். புதிய பள்ளி, பழக்கமில்லாத ஆசிரியர்கள், நெருங்கி பழகாத தோழர்கள் என தவித்துக் கொண்டிருந்த மணிக்கு பிரியா தான் ஆறுதல்.. அன்று முதல் இன்று வரை, பிரியா மட்டும் தான் அவனுக்கு ஒரே ஆறுதல்.. மணி அவன் வீட்டில் இருந்ததை விட அவளோடு இருந்தது தான் அதிகம்..

மணிக்குப் பிரியாவின் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் இருந்தது.. அதற்கும் மேலாக அவளைப் பற்றிய நல்ல புரிதலும் இருந்தது. பிரியாவின் இந்தப் பேச்சை கேட்டுவிட்டு, அவள் தான் தனக்கு சரியானத் துணை என்று முடிவு செய்தான்..

அடுத்த நாளே மணி, பிரியாவிடமும், கேசவனிடமும் ஒரே நேரத்தில் தன் விருப்பத்தைச் சொன்னான்.. பிரியாவின் நீண்டக் கால நண்பன் என்பதால் கேசவனுக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும்.. அவருக்கும் தன் மகளின் குணத்திற்கு சிறு வயது முதலே அவளுடன் இருக்கும் மணி பொருத்தமானவனாக இருப்பான் என்று தோன்றியது. சாந்தியும் கேசவனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவளாய், " ஆம்" என்பது போல தலையாட்டினாள்..

மணி நேரடியாக பிரியாவின் சம்மதத்தைக் கேட்டான்.. அவள் பதில் ஏதும் சொல்லாமல் நின்றுக் கொண்டிருந்தாள்..

பிரியா, உன்னை நான் முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளேன். உன் அளவில்லா அன்பையும் ஆறுதலையும் தவிர எனக்கு வேறெதுவும் தேவையில்லை. கட்டில் அறையில் மட்டும் உன் ஆசைக் கணவனாக, மற்றெல்லா பொழுதுகளிலும் உன் அன்புத் தோழனாக இருப்பேன்., மணி..

அடுத்து வந்த முகூர்த்த தினத்திலேயே, மணிக்கும் பிரியாவிற்கும் எந்த வரதட்சணை பரிமாற்றமும் இல்லாமல், அன்பை மட்டும் பரிமாறிக் கொண்டு திருமணம் சிறப்பாக நடந்தது...!!!

பிரியா அன்று மகிழ்ச்சியில் மிக அழகாக இருந்தாள்.. தன் நெருங்கிய தோழியே, தனக்கு மனைவியானதை நினைத்து பூரித்து போனான் மணி.. கேசவனும் சாந்தியும், தங்கள் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்த மன நிறைவில் ஆனந்த கண்ணீருடன் அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல்லாண்டு காலம் நிம்மதியாக வாழ ஆசிர்வாதம் செய்தனர்...!!!

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...